சேகுவேரா நினைவு தினத்தில் கோரிக்கை தின தெருமுனைக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்.ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசு பணிகளில் ஒப்பந்த முறையில் நியமிப்பதை உடனே கைவிடவேண்டும்.ஏ.எப்.டி பஞ்சாலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்து வரும் சமூக குற்றங்களை கட்டுபடுத்த புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சுதேசி பஞ்சாலை எதிரில் நiபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் இரா.சரவணன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிவரவன்,நிர்வாகிகள் மோகன்,யோகராஜ்,நாகமுத்து ,இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் அருண் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக சேகுவேராவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Place : -Government Boys I T I Campus, Puducherry
No comments:
Post a Comment