Friday, October 25, 2013

D Y F I Mannadipet Committee Agitation in Market Street at Madagadipet to eliminate liquor shop

D Y F I Mannadipet Committee Agitation in Market Street at Madagadipet to eliminate liquor shop near School , College , Temple and Marriage Hall
புதுச்சேரி,அக்.26-
புதிய மதுபானகடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மதகடிப்பட்டுல் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ள நிலையில் பேரூந்து நிறுத்தத்தில் புதியதாக மதுபான கடை திறப்பதற்கு அனுமதி வழங்கியதை உடனே திரும்பபெற வேண்டும்.ஏற்கனவே அப்பகுதியில் செயல்படும் மதுபானகடைகளை  கட்டுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மதகடிப்பட்டில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்க கொம்யூன் தலைவர் கார்க்கி தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் இரா. சரவணன்,துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி,செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிரவன்,விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள்  கலிவரதன், உலகநாதன்,சரவணன்,மாணவர் சங்க செயலாளர் ஆனந்து ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று பேசினார்கள்.இப்போராட்டத்தில் திரளான அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment