புதுச்சேரி,அக்.25-
புதுச்சேரி அடுத்துள்ள பாகூர் அரங்கனூரில் தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனையை போர்காலஅடிப்படையில் தீர்க்க வேண்டும்.மக்கள் தொகைக்கு ஏற்ப்ப நீர்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.இலவச மனைப்பட்டா உடனே வழங்க வேண்டும்.அரங்கனூர் முழுவதும் சாலைவசதி,கழிவுநீர் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
அரங்கனூர் நீர் தேக்க தொட்டி முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் கிளைத்தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் இரா.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,முன்னாள் பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் ,பாகூர் கொம்யூன் செயலாளர் அரிதாஸ்,செயலாளர் வெங்கடேசன்,பொருளாளர் தனிகா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.கிளைச்செயலாளர் புஸ்பராஜ்,விமல் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக கொம்யூன் நிர்வாகத்தை கண்டித்து வாலிபர்கள் குடிநீர் பானைகளை உடைத்து முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment