இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை திருட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து புதுச்சேரி காவல்துறை அலுவலகம் முற்றுகை.
புதுச்சேரி வைசியால்வீதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் சுப்புரமணியன் தொடர்ந்து பாலியல் சீன்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்திற்கு புகார் கடிதம் வந்துள்ளது.இப்புகாரின் அடிப்படையில் சமுகநலத்துறை அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித்,செயலாளர் ஆனந்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் அதிகாரிகளை சந்தித்து நடந்த சம்பவத்திற்கு காராணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.
முற்றுகை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திராளான மாணவர்கள் இலாஸ்பேட்டை அவ்வை நகரில் உள்ள ஆசிரியர் சுப்புரமணியனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
போலிஸார் வழக்கு
ஆசிரியர் வீட்டு அருகே முற்றுகையில் ஈடுபட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித் ஆகியோர் மீது திருட்டு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இலாஸ்பேட்டை காவல்நிலைய ஆய்வாளரின் தூன்டுதலாலே இப்பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாணவர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வகுப்பு புறக்கணிப்பு
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதை கண்டித்தும் மாணவர் சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை உடனே திரும்ப பெறக்கோரி புதுச்சேரி காவல்துறை முதுநிலை கண்கானிப்பாளர் அலுவலகத்தை சட்டகல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவரும்,சட்டகல்லூரி இறுதியாண்டு மாணவருமான சரவணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் உறுதி
முதுநிலை கண்கானிப்பாளர் பிரவீன்குமார் திரிபாதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சங்க நிர்வாகிககள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை திரும்ப பெறப்படும் எனறு உறுதி அளித்ததின் பேரில் இப்போராட்டம் கைவிடப்பட்டது.இதேப்போல் மோதிலால்நேரு பால்டெக்னிக் மாணவர்களும் வகுப்பு புறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.