புதுச்சேரி,பிப்.4-
பாகூர் ஐ.டி.ஐ க்கு மத்திய அரசின் தேசிய தொழிற் கழக அங்கீகாரம் வழங்கக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.
பாகூர் ஐ.டி.ஐ க்கு முதல்வர் ,ஆசிரியர், அலுவலக பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.ஐடிஐ க்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.ஐ.டி.ஐ யில் எலக்டிரிக்ஷன்,கம்யூட்டர் டாட்ட என்ட்ரி,தையல்பயிற்சி போன்ற பிரிவுகளை துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்போரட்டம் நடைபெற்றது.
பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில துணைத்தலைவர் செந்தில் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
வாலிபர் சங்க முன்னால் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,பொருளாளர் கதிரவன்,மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,துணைத்தலைவர் ரஞ்சித்,கொம்யூன் செயலளார் பிரவீன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.இறுதியாக டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் ப.சரவணன் போராட்டத்தை முடித்து வைத்தார்.இப்போராட்டத்தில திரளான மாணவர்கள்,வாலிபர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment