Monday, March 24, 2014

பொய்வழக்குகளை திரும்பக்கோரி புதுச்சேரியில் ஜனநாயக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மாணவர் சங்க தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பக்கோரி புதுச்சேரியில் ஜனநாயக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள சுசிலாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன் தொடர்ந்து அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதை கண்டித்து லாஸ்பேட்டையில் உள்ள ஆசிரியர் சுப்ரமணியனின் வீட்டு எதிரே மாணவர்கள்,மாதர் அமைப்பைச்சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர் சங்க நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித் ஆகியோர் மீது ஆசிரியர் சுப்ரமணியன் திருட்டு புகார் கொடுத்துள்ளார்.


அதனை தொடர்ந்து ஆசிரியருக்கு ஆதரவாக இலாஸ்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதை கண்டித்தும்.போடப்பட்டுள்ள திருட்டு வழக்கை உடனே திரும்ப பெறக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
 


புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் அருண் தலைமை தாங்கினார்.பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் லெனின்துரை,ஆனந்து,சுகுமாறன்,சுவாமிநாதன்,சரவணன்,பிரன்னா,தெய்வானை மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். திரளான மாணவர்,வாலிபர் ,மாதர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment