நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளில் 50 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. வேலையின்மையும், வறுமையும் மிகப்பெரும் சாபக்கேடாக இன்றும் தொடர்கிறது. நாட்டில் 77 கோடி மக்கள் நாளொன்றுக்கு ரூ.20 மட்டுமே வருவாய் பெறும் நிலையில் உள்ளனர். சரிபாதிக்கும் மேலான இந்தியப் பெண்கள் இரத்த சோகையாலும், 3வயதுக்கு உட்பட்ட 40மூ குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவானவர்களாகவும் இருக்கிறார்கள். சுகாதாரமும், கல்வியும் காசு உள்ளவர்களுக்கு மட்டும் தான். 63 ஆண்டுகளுக்குப் பிறகு தான் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச்கல்வி என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. இது எப்போது முழுமைபெறும் என்பது கேள்விக்குறியே.
மத்தியில் தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியதிகாரத்தில் உள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளது. இந்தக் காலத்தில் மிகப்பெரும் வசதிபடைத்தவர்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் ஆதரவான தாராளமயக், தனியார்மயக் கொள்கைகளை அமுல்படுத்தியே வந்துள்ளது. இதனால் கடந்த நிதியாண்டு மட்டும் மிகப்பெறும் செல்வந்தர்களுக்கு 80இ000ஃ- கோடி ரூபாய் வரிச்சலுகையாக-மானியமாக வழங்கியுள்ளது. மறுபுறத்தில் ஏழைகளுக்கு வரி உயர்வும், மானிய வெட்டும் பெரும் சுமைகளாக ஏற்றப்பட்டுள்ளது. எப்போதுமில்லாத விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பொதுவினியோகத்திட்டத்திற்கான மானியம் ரூ.4000ஃ- கோடி வெட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்துகிற உரத்தின் விலை உயர்த்தப்பட்டதுடன், உரமானியமும் வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. மூடியுள்ள பொதுத்துறை உர நிறுவனங்களை திறக்க நடவடிக்கை இல்லை. இத்தகைய தவறான கொள்கையாலும், வறட்சியாலும் உணவு தானிய உற்பத்தியில் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. உணவு பெறும் உரிமை கேள்விக்குறியாகிவிட்டது.
மத்திய அரசின் விலைவாசி கொள்கைக்கு எதிராக இடதுசாரிகள் நடத்திய ஏப்ரல்-8 சிறை நிரப்பும் போராட்டத்தில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இடது சாரிகட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து நடத்திய ஏப்ரல் 27 பொது வேலை நிறுத்தம் மக்கள் பங்கேற்போடு வெற்றிகரமாக நடந்தது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் வரவு செலவு அறிக்கை மீது கொண்டுவரப்பட்ட வெட்டுத்தீர்மானத்தை காங்கிரஸ் அரசு கேவலமான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியை பாதுகாத்துக்கொண்டது. என்றாலும் ஓராண்டு ஆட்சி முடிதவற்குள்ளாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை கணக்கிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
2வது ஐ.மு.கூட்டணி அரசு அணுசக்தி விபத்து பொறுப்பு மசோதா, அந்நியப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் மசோதா-இந்திய விவசாயத்தை சீரழிக்கும் ஆசியான் ஒப்பந்தம், மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிப்பு-மத்திய புலனாய்வுக்கழகத்தை தவறாக பயன்படுத்துவது, பொதுத்துறை பங்குகளை விற்பது, வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் - முறைகேடு என மக்கள் விரோத ஆட்சியை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க வும் இத்தகைய கொள்கைக்கு பல்லக்கு தூக்கி பவணி வருகிறது. திசையில்லாமல் செல்லும் படகைப்போல காங்கிரஸ் ஆட்சி தறிகெட்டு செல்கிறது. இந்தப் பதையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசும் பயணித்துக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment