Wednesday, September 29, 2010
வெண்கொடி ஏந்திய இளைஞர்கள் மாபெரும் பேரணி கோவையில் எழுச்சி
கோவை, செப்.27-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாளான திங்க ளன்று கோவையில் மாபெரும் இளைஞர் பேரணி நடைபெற்றது. இதில் வெண்கொடி ஏந்திய இளைஞர்களின் எழுச்சி மிகு அணிவகுப் பால் கோவை மாநகரம் ஸ்தம்பித்தது.
கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த மாநில மாநாட்டின் நிறைவாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எழுச்சிப் பேரணி திங்களன்று மாலை நேரு விளையாட்டரங்கின் முன்பாகத் துவங்கியது. சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாள ரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. ராஜேஷ் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். அப்போது கேரள செண்டை மேளங்கள் விண்ணதிர முழங்கின. இதைத் தொடர்ந்து திருப்பூர் கலைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்களின் தப்பாட்டம்., சூலூர் தாலுகா கலைக்குழுக்களின் சிலம்பாட்டம், ஒயிலாட் டத்தைத் தொடர்ந்து 13 வெண்பதாகைகளை ஏந்தி ராணுவ மிடுக்குடன் இளைஞர்கள் கம்பீரமாக அணிவகுத்தனர். ஆயிரக்கணக் கான வெண்தொண்டர்கள் அணிவகுப்போடு பின்தொடர்ந்தனர். நேரு விளையாட்டரங்கில் துவங்கிய பேரணி நஞ்சப்பா சாலை, காந்திபுரம், நூறடி சாலை, பவர் ஹவுஸ் வழி யாக சிவானந்தா காலனியில் உள்ள பொதுக் கூட்ட மேடையைச் சென்றடைந்தது. வழி நெடுகிலும் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தும் அட்டைகளுடன் இளைஞர்கள் பேரணியில் பங்கேற்றனர். மத்திய மாநில அரசு களின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் பல்வேறு ரதங்கள் அணிவகுந்தன. பேரணியின் இருபுறமும் மக்கள் கூடி நின்று இளைஞர்களின் எழுச்சி மிகு அணிவகுப்பை கண்டுகளித்தனர். .
போலீசார் தள்ளுமுள்ளு:
பேரணியில் தனியார் பள்ளிகளில் கட்ட ணத்தை நிர்ணயித்த கோவிந்தராசன் கமிட்டி யின் பரிந்துரைகள் அமலாக்கப்படாததைக் கண்டித்து, ‘கோவிந்தராசன் கமிட்டியை விமர் சித்து உருவபொம்மைகளை இளைஞர்கள் ஏந்தி வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் வாலிபர் சங்க தலைவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து வாலிபர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து காவல்துறையினர் ஆளும்கட்சியின் ஏவ லாளாக மாறி பேரணியில் குளறுபடி செய்ய முயன்றனர். ஆனால் வாலிபர் சங்க தலைவர்கள் இளைஞர்களை அமைதிபடுத்தி பேரணியை வழிநடத்தி சென்றனர். காவல்துறையினர் இடையூறுகளுக்கு மத்தியிலும் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் உருவப்பொம்மைகளை ஏந்திச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment