நாகர்கோவில், செப். 22 -
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டிற் கான ஜோதி மற்றும் கொடிப் பயணக்குழுக்கள் புறப்பட்டன.
இந்த பயணக் குழுக்க ளுக்கு, மாவட்டங்களில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 13-வது மாநாடு, செப்டம்பர் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது. இதை யொட்டி, குமரி மாவட்டத்திலி ருந்து தியாகிகள் நினைவு ஜோதியும், கடலூரிலிருந்து தியாகிகள் குமார் - ஆனந்தன் நினைவு ஜோதியும், விழுப் புரத்திலிருந்து தோழர் சுரேஷ் நினைவாக கொடிப் பயணமும் தொடர் ஓட்டமாக மாநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
குமார்-ஆனந்தன்
நினைவு ஜோதி
கடலூர் புதுப்பாளையம் பகு தியில் கள்ளச்சாராயம் விற் பதை எதிர்த்து போராடி, சாராய வியாபாரிகளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட தியாகி கள் குமார்- ஆனந்தன் ஆகி யோரின் நினைவாக, புதுப் பாளையத்தில் இருந்து ஜோதி புறப்பட்டது.
இந்த ஜோதிப் பயண துவக்க விழாவிற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமை வகித் தார். நகரத் தலைவர் ஆர்.மணி வண்ணன் வரவேற்றார். மாநி லத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு ஜோதியை எடுத்துக் கொடுக்க பயணக்குழுவின ரான -மாநில செயற்குழு உறுப் பினர் கே.ராஜேஷ் கண்ணன், ஜி.ஸ்டாலின், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கண்ணன் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டச் செயலா ளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பயணக்குழு குள்ளஞ் சாவடி, குறிஞ்சிப்பாடி, புவன கிரி, கீரப்பாளையம், சிதம்பரம், அண்ணா மலைநகர் வழியாக நாகை மாவட்டத்தை அடைந் தது. பயணக்குழு செல்லும் வழிகளில், வாலிபர் சங்கத்தி னர் உற்சாக வரவேற்பு அளித் தனர்.
நினைவு ஜோதி
குமரி மாவட்டத்திலிருந்து செல்லும் தியாகிகள் நினைவு ஜோதி, அருமனையிலிருந்து செவ்வாயன்று காலையில் புறப்பட்டது. அருமனை சந்திப் பில் நடைபெற்ற ஜோதிப் பயண துவக்க நிகழ்ச்சிக்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் புஷ்பதாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சசிகுமார், நிர்வாகி கள் ஜோயல், ஷாலினி, சுரேஷ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயணக்குழுவினரான மாநில நிர்வாகிகள் அலெக்ஸ், நரசிம்மன், கல்பனா, புவிராஜ், முருகன் ஆகியோர் அடங்கிய குழுவிடம், சங்கத்தின் மாநில முன்னாள் செயற்குழு உறுப்பி னரும், திருவட்டாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான லீமாறோஸ் ஜோதியை எடுத் துக் கொடுத்து, பயணத்தைத் துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் ஜோதி தொடர் ஓட்டமாக புறப்பட்டு பல்வேறு பகுதிகள் வழியாக மாலையில் நாகர்கோவிலை வந்தடைந் தது. வழியில் மேல்புறம், குழித் துறை, வெட்டுவந்நி, மார்த் தாண்டம், இரவிபுதூர்கடை, சாமியார்மடம், தக்கலை, சுங் கான்கடை, பார்வதிபுரம், கிருஷ்ணன்கோயில் ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு, மாதர், போக்குவரத்து தொழி லாளர், மாணவர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற பொதுக்கூட்டம், புதனன்று ஆரல்வாய்மொழி வழியாக நெல்லை மாவட்டத் தில் தொடர் ஓட்டமாக ஜோதிப் பயணம் நடைபெற்றது.
கொடிப்பயணம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் மக்களின் அடிப்படை பிரச்ச னைகளுக்காக போராடிய போது சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப் பட்ட தோழர் சுரேஷின் நினை வாக கொடிப் பயணம் விழுப் புரத்திலிருந்து புறப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் வெண்பதாகையை முன்னாள் தலைவர் ஜி. ஆனந்தன் எடுத் துக் கொடுக்க, மாநிலச் செய லாளர் எஸ்.கண்ணன் பெற்றுக் கொண்டார்.
மாநில செயற்குழு உறுப் பினர்கள் ஜே. ராஜேஷ்கண் ணன், ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், பொரு ளாளர் எம். கோபால கிருஷ் ணன், நிர்வாகிகள் ஜானகி, எம். முத்துவேல், எஸ். சத்தியராஜ், ஜி. நாகராஜ், மாநில குழு உறுப் பினர் ஆர்.கண் ணப்பன் ஆகி யோர் பேசினர். முன்னதாக எஸ். மதுசூதனன் வரவேற்றார்.
powered by இந்தியா இன்டலெக்ட் © All Rights Reserved. தீக்கதிர் 2005-2006.
No comments:
Post a Comment