Wednesday, September 29, 2010

வாலிபர் சங்க தலைவர்கள் மீது காவல்துறை பொய் வழக்குப்பதிவு


கோவை, செப்.28-

இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் தலைவர்கள் மீது கோவை காவல்துறை பொய் வழக்குப்பதிவு செய் துள்ளது.

இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 13 வது மாநில மாநாடு கோவையில் செப் டம்பர் 24 முதல் 27 வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான செப்டம் பர் 27 அன்று பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற எழுச்சி பேரணி நடைபெற்றது. முன்னதாக கோவை வ.உ.சி பூங்கா முன்பு தமிழகம் முழு வதும் இருந்து வந்திருந்த இளைஞர்கள் குவிந்தனர். அதில் பலர் கைகளில் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு இருந்தனர். சில இளைஞர்கள் கையில் ஒரு பொம்மையுடன் வந்தனர். அதில் தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயத்தில் கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரைகளை அமல் படுத்த மறுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை கண் டித்தும், தனியாரின் தடை ஆணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யாத திமுக அரசை விமர்சித்தும் வாச கங்கள் எழுதப்பட்டிருந் தது. இதனை அனைவரும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப் போது கோவை காவல் துறை துணை ஆணையர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் திரண் டிருந்த கூட்டத்திற்குள் புகுந்தனர்.

இளைஞர்கள் கையில் வைத்திருந்த பொம்மையை கையில் வைத்திருக்க கூடாது என கூறினர். இதற்கு இளை ஞர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதையடுத்து காவல் துறையினர் அராஜகமாக இளைஞர்களின் கையில் இருந்த பொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் வாலி பர் சங்க தலைவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் இளைஞர் களை அவமரியாதையாக பேசி தாக்க முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரின் தொடர் எதிர்ப்பையும் மீறி இளைஞர் கள் பொம்மையை ஊர்வ லத்தில் கொண்டு சென்றனர். பேரணி நடைபெறும் பகுதி யில் வாகன போக்குவரத்து மாற்றி விடப்படவில்லை. போக்குவரத்தையும் காவல் துறையினர் ஒழுங்குபடுத்த வில்லை. இதைக் கண்டித்து பேரணியில் சென்ற இளை ஞர்கள் கோஷம் எழுப்பி னர். அப்போது வாலிபர் சங்க நிர்வாகிகள் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் செல்ல வழிவகுத்து கொடுத்தனர்.

தொடர்ந்து பேரணி சென்று கொண்டிருந்த போது காந்திபுரம், மற்றும் 100 அடி சாலையில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது. பேரணி பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டி ருந்த சிவானந்த காலனியை அடைந்த போது அந்த பகுதி யிலும் மின்சாரம் துண்டிக் கப்பட்டது. அப்போதும் வாலிபர்கள் அரசு நிர்வா கத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இருந்த போதி லும் பொதுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

பொய் வழக்குப்பதிவு

இந்நிலையில் பேரணி நடைபெற்ற பின்னர் கோவை பி4 காவல் நிலையத்தில் வாலிபர் சங்க தலைவர்கள் எஸ்.கண்ணன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, கோவை சின்ன வேடம்பட்டி பேரூராட்சித் தலைவர் வி.ராமமூர்த்தி, உள்ளிட்ட பலர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிட மால் தடுத்தல் பிரிவு 143, சட்டவிரோதமான முறை யில் உருவபொம்மை கொண்டு சென்றதாக பிரிவு 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment