புதுச்சேரி, 492 ச.கி.மீ பரப்பளவு கொண்ட மாநிலமாக உள்ளது. புதுச்சேரி ச.கி.மீ., (தமிழக பகுதி) காரைக்கால்-160 ச.கி.மீ., (தமிழக பகுதி), மாஹே, 9 ச.கி.மீ. (கேரளம்), ஏனம் 30 ச.கி.மீ (ஆந்திரா பகுதி) என நான்கு பகுதிகளில் மொத்தம் 9இ74இ345 பேர் வாழ்கின்றனர். இதில் ஆண்கள் 4இ86இ961 மற்றும் பெண்கள் 4இ87இ384 லட்சம் பேர் அதிலும் குறிப்பாக வேலை வாய்ப்பகத்தில் பதிந்து உள்ளவர்கள். 2010 ஆம் ஆண்டின் படி 2இ10இ000 ஆயிரம் பேர். இதனால் புதுவையில் வேலையின்மை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துவருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2005 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் போது, ஏராளமான இலவச திட்டங்களை முன் வைத்தது. குறிப்பாக, வேலையின்மையை போக்க தொழில் பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலம், சுதேசி, பாரதி பஞ்சாலைகள் திறக்கப்படும் என்றும், இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் மக்களிடம் கூறினார்கள். அவற்றை ஏற்காத புதுச்சேரி வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிபெரும்பான்மையாக தீர்ப்பு கூறினார்கள். அதன் பின்னர் தி.மு.க., பா.ம.க, சுயேச்சைகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்து திரு.N.ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் விரோத கொள்கையே மிக வேகமாக அமுல்படுத்தியது. அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தது. இத்திட்டம் சரிவர நடத்த முடியாத நிலைமை ஏற்ப்பட்டது. அதன் பின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் இலவச அரிசி என்று மாற்றம் செய்து கொண்டார்கள். மேலும், வேலையில்லா கால நிவாரணத்திட்டம் உருவாக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்து 20,000 விண்ணப்பங்கள் இளைஞர்களுக்கு வினியோகம் செய்தது. அதில் கடுமையான நிபந்தனைகள் காரணமாக இந்தநாள் வரை இளைஞர்கள் பயன்பெற முடியவில்லை. 3 ஆண்டுகள் கடந்த சூழலில் காங்கிரஸ் ஆட்சிக்குள் பதவி சண்டை எற்பட்டு திரு.N.ரங்கசாமி அவர்களை முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு திரு.ஏ.வைத்திலிங்கம் புதிய முதல்வராக பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடையும் கால கட்டத்தில் இன்னும் வேகமாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வுக்கு தீணி போடு வேலையை காங்கிரஸ் ஆட்சி செயல்பட்டு வருகிறது. கல்வி பிரச்சனையில் தனியார் பள்ளி கல்லூரிகளை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் அரசு மருத்துவ கல்லூரிக்கு 132 கோடி செலவு செய்தும் இன்றைக்கு துவங்கப்படவில்லை. தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் விடும் ஆட்சியாளர்கள் அரசு துறைகளில் காலி பணியிடம் கொல்லைபுறமாக நிரப்பி வருகின்றனர். படித்த பட்டதாரிகளை பழிவாங்கும் நோக்கில் ஒப்பந்த ஆசிரியர்களாக குறைந்த சம்பளம், பணி பாதுகாப்பு இன்றி வேலை வழங்கும் கொள்கையை திணிக்கிறது. வேலையின்மை பிரச்சனை புதுச்சேரியில் மிகப்பெரிய சமூக குற்றமான வெடிகுண்டு கலாச்சாரத்தை ஊட்டி வளர்த்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் அளவில் புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இரண்டு லட்சத்து பத்தாயிரம் இளைஞர்;களுக்கு, வாய்கரிசி போடும் காங்கிரஸ் அரசின் கொள்கையை எதிர்த்துதான் கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது போராட்டம் இருந்துள்ளது. இவற்றை விவாதித்து எதிர்காலத்தில் வேலையின்மைக்கு எதிராக நமது போராட்டத்தை தீவிரமாக திட்டமிட வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment