Wednesday, January 19, 2011

பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்துவதைக் கண்டித்து தண்டோரா போட்டு அறிவிக்கும் போராட்டம்

புதுச்சேரி ஜன 17
காங்கிர° - திமுக அரசின் பெட்ரோல் விலையை தினந்தோறும் உயர்த்துவதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தண்டோரா போட்டு அறிவிக்கும் போராட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.54 உயர்த்தியதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது. புதுச்சேரி நேரு வீதியில் நடந்த இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்க நகர கமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜா, கோபால் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர். முன்னதாக பெட்ரோல் விலை உயர்வு அடங்கிய பதாகையுடன் மிஷன் வீதி. காந்தி வீதி, அண்ணாசாலை வழியாக ஊர்வலமாக சென்று பெட்ரோல் விலை உயர்வை தண்டோரா போட்டு அறிவிப்பு செய்தனர்.


பாகூர்
பாகூர் கடைவீதியில் இருசக்கர மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுக்கும் போராட்டத்திற்கு வாலிபர் சங்க கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், கொம்யூன் செயலாளர் அரிதா°, பொருளாளர் வீரப்பன், வெங்கடேசன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த நூதனப் போராட்டம் கடை வீதி மக்களை ஆச்சர்யப் படுத்தியது.

No comments:

Post a Comment