Wednesday, January 19, 2011

பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா



புதுச்சேரி ஜன 17
இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக முதலாம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா லா°பேட்டை அசோக் நகரில் நடைப்பெற்றது.
சிறுவருக்கான ஓட்டப்பந்தயம், ஓவியம் வரைதல், உரி அடிப்பு, பெண்களுக்கான கோலப்போட்டி, இசைநாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். மாணவர் சங்க தமிழ் மாநில இணை செயலாளர் °டாலின், வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், கமிட்டி செயலாளர் கதிரவன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் லெனின் துரை, நகர உயர்நீதி மன்ற வழக்கறிஞர் °டாலின் ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்கள்.
இவ்விழாவையொட்டி புதுவை சிகரம் கலைக்குழுவினரின் தப்பாட்டம், சிறுவர்களின் இசை நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இவ்விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment