Wednesday, January 19, 2011

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்ததற்கு அரசின் பரிசு: வாலிபர்கள் மீது போலீஸ் தடியடி: 8 பேர் பலத்த காயம்; 60 பேர் கைது


சென்னை, ஜன. 18 -

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய வாலி பர் சங்கத்தினர் மீது போலீசாரும், அடையாளம் தெரியாத நபர்களும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். இதில் எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:

பெட்ரோல் விலைகளை பெட் ரோலிய நிறுவனங்களே தீர்மா னித்துக் கொள்ள மத்திய அரசு அனு மதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி வழங்கப்பட்ட கடந்த ஆறு மாதங்க ளில் ஏழு முறை பெட் ரோல் விலை உயர்ந்துள்ளது. கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த் தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ச. லெனின், பொருளாளர் தாமு, வடசென்னை மாவட்டத் தலைவர் இல. சண்முக சுந்தரம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் முருகன் ஆகியோர் தலைமையில் செவ்வாயன்று (ஜன.18) நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனை முற்றுகையிட ஊர் வலமாக வந்தனர்.

இந்தியன் ஆயில் பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் காவல் துறையினர் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இத னால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் பிர தமர் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

தடியடி

இதனையடுத்து போலீசார் காட்டு மிராண்டித்தனமாக தடியடி நடத்தி னர். கீழே விழுந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டு தாக்கிய தோடு, பூட்ஸ் கால்களால் மிதித்தனர். லத்தியை கொண்டு வயிற்றில் குத்தி னர். இந்த தாக்குதல்களில் 8 பேர் காயம டைந்தனர்.

இதனிடையே, ஒரு பகுதியினர் இந்தியன் ஆயில் பவனுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசாரும், அடையா ளம் தெரியாத நபர்களும், ஆயில் பவன் ஊழியர்களும் சுற்றி வளைத்து தாக்கினர். இத் தாக்குதலில் முரளி (மயிலை), சுரேஷ் (சோழிங் கநல்லூர்), குமரன் (சைதை), மணி (ஆயிரம் விளக்கு), ரமேஷ் (எழும்பூர்), உதயா (அண்ணாநகர்), சுரேஷ் (வேளச்சேரி), ஜெயந்த் (தாம்பரம்) ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்து கொண்டி ருந்தவர்களை போலீசார் கீழே தள்ளி தரதரவென்று இழுத்து வேனில் தூக்கி எறிந்தனர். பின்னர் வேனுக்குள் ஏறி லத்தியால் தாக்கி பூட்ஸ் காலால் உதைத்தனர். இதனால் அந்த இடம் போர்க் கோலமாக காட்சி அளித் தது.

பலத்த காயமடைந்த வர்கள் உட் பட கைது செய் யப்பட்ட அனை வரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏபிவிபி திருமண மண்ட பத்தில் வைத்திருந்தனர்.

தலைவர்கள் ஆறுதல்

இத்தகவலை அறிந்து அங்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், பெரம் பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் க. பீம்ராவ், செயற்குழு உறுப்பினர்கள் டி.நந்த கோபால், டி.கே.ராஜன், ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்படி போலீசாரு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பலத்த காய மடைந்த 8பேரை போலீசார் மருத் துவமனைக்கு அழைத்துச் செல் வதாக கூறினர். வேனில் ஏற்றி சென்று, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 3 மணி நேரம் வைத்திருந்தனர். காய மடைந்தவர்களில் சிலர் மயக்கமடைந் தனர். அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச் சைக்காக கொண்டு சென்றனர்.

No comments:

Post a Comment