Tuesday, January 18, 2011

அங்க பிரதட்சனப் போராட்டம்


புதுச்சேரி ஜன 18
குண்டும் குழியுமான புதுச்சேரி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அங்க பிரதட்சனப் போராட்டம் நடைப்பெற்றது.
புதுச்சேரி கடலூர் சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடந்து வருவதை தடுக்க உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதனப்போராட்டம் நடைப்பெற்றது.
கன்னியகோவில்-கடலூர் சாலையில் நடந்த அங்கப்பிரதட்சன போராட்டத்திற்கு வாலிபர் சங்க பாகூர் கொம்யூன் கமிட்டி பொருளாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். டிஒய்எப்ஐ பிரதேசத் தலைவர் சந்துரு, செயலாளர் தமிழ்ச்செல்வன், துணை செயலாளர் சரவணன், கொம்யூன் செயலாளர் அரிதா° மற்றும் அருள், மணிபாலன், வெங்கடேசன், லெனின் பாரதி உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக குண்டு குழியுமான சாலையில் வாலிபர்கள் படுத்து உருண்டு அளூக பிரதட்சணம் செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
படம் உள்ளது.

No comments:

Post a Comment