Thursday, January 27, 2011

குடியரசு தின விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா


புதுச்சேரி ஜன 27
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 22வது குடியரசு தின விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் நடைப்பெற்றது.
சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வாலிபர்களுக்கான வழுக்குமரம் ஏறுதல், பெண்களுக்கான இசைநாற்காலி, கோலம்வரைதல் மற்றும் உறியடித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு வாலிபர் சங்க புதுவை பிரதேச உழவர்கரை கமிட்டி கன்வினர் பா°கர் தலைதைத் தாங்கினார். சிபிஎம் உழவர்கரை கமிட்டி செயலாளர் லெனின் துரை, டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், துணை செயலாளர் சரவணன், மாதர்சங்க நிர்வாகி சத்யா, எ°எப்ஐ செயலாளர் ஆனந்து ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். வாலிபர் சங்க நிர்வாகிகள் அக்கிம், முரளி, சுகன்யா, அக்பர், சபி உள்ளிட்ட திரளான வாலிபர்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக சிகரம் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைப்பெற்றது.
படம் உள்ளது.

No comments:

Post a Comment