Sunday, January 30, 2011

மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


புதுச்சேரி ஜன 30
மஹாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லா°பேட்டையில் நடைப்பெற்றது. காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு, தீண்டாமைக்கு எதிராக வாலிபர்கள், சிறுவர்கள் உறுதி மொழி ஏற்றனர். மேலும் அசோக் நகர் பாரதியார் சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை சுத்தம் செய்து, வர்ணம் பூசினர்.
இந்த நிகழ்ச்சிக்கு டிஒய்எப்ஐ கிளைத் தலைவர் வைத்தியநாதன் தலைமைத் தாங்கினார். வாலிபர் சங்க பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பிரபுராஜ், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து, துணை செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கிளை நிர்வாகிகள் பாலாஜி, ராமகோபால், ரோஹன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment