Monday, December 31, 2012

வினோதினிக்கு புதுச்சேரி அரசு உடணடியாக மருத்துசிகிச்சைக்கான முழு நிவாரணத்தை வழங்க வேண்டும்

புதுச்சேரி,டிச-31
 பெண்கள் குறித்து பேசிய கருத்தை மதுரை ஆதினம் உடணடியாக திரும்பபெற வேண்டும் என்று மாதர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதன் ஒருபகுதியாகவே தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவகல்லுhரி பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இன்றைக்கு இறந்துள்ளார்.இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.இன்றைக்கு இருக்கும் தண்டனை சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.எனவே மத்திய அரசு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை உடனுக்குடன் குற்றவாலிக்கு அதிக பட்சமாக தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும் மேலும் குற்றவாலிக்கு தண்டனை உடனே வழங்குவதற்கு உண்டான பெண்கள்குழுவையும் அமைக்க வேண்டும் என்று இன்றைக்கு ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
மதுரை ஆதினம்
சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதினம் பெண்கள் ஆடை அணிவது குறித்து கூறிய கருத்தை உடணடியாக திரும்ப பெறவேண்டும்.பெண்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.தங்களுக்கான ஜனநாயக பூர்வமான முடிவுகளை எடுக்கும் உரிi பெண்களுக்கு உள்ளது.ஒரு சில சாதிய அமைப்புகளின் தலைவர்கள் என்று தங்களை கூறிகொள்ளும்  ராமதா° போன்றவர்கள் பெண்கள் குறித்து பேசும் கருத்து சரியில்லை.
புதுச்சேரி வினோதினிக்கு
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காரைக்காலை சேர்ந்த இளம் பெண் வினோதினிக்கு புதுச்சேரி அரசு உடணடியாக மருத்துசிகிச்சைக்கான முழு நிவாரணத்தை வழங்க வேண்டும்.இதில் சம்பந்தபட்டுள்ள குற்றவாலிக்கு அதிகபட்ச தண்டணை வழங்க காவல்துறை செயல்படவேண்டும் என்றார்.மேலும் எங்கள் அமைப்பும்,டிஒய்எப்ஐ,எ°எப்ஐ உள்ளிட்ட மாணவர்,வாலிபர் அமைப்புகளுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனவரி 1 செவ்வாய்கிழமை  பொதுமக்களிடம் உண்டியல் மூலம் நிதி வசூலித்து கொடுக்க உள்ளோம்.புதுச்சேரியில் சமீபகாலமாக செயல்படாமல் உள்ள மகளிர் ஆணையத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பின் போது மாணவர்,வாலிபர்,மாதர் சங்கங்களின் பிரதேச நிர்வாகிகள் சுமதி,தெய்வானை,தமிழ்ச்செல்வன்,ப.சரவணன்.ஆர்.சரவணன்,
ஆனந்து,ரஞ்சித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




புதுச்சேரி,டிச-25

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


டில்லியில ஓடும் பேரூந்தில்  பெண்ணை  பாலியல்பலாத்காரம் செய்த குற்றவாலிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்.காரைக்காலை சேர்ந்த இன்ஜினீயர் வினோதினி மீது ஆசிட் வீசிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும்,துhத்துகுடி மாவட்டத்தில் 7 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாலிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரியும்  இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ப.சரவணன்,உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக்குழு கண்வீனர் சுமதி,சமம் பெண்கள் சுயசார்பு இயக்க நிர்வாகிகள் பரிமலா,இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் மாதர்,வாலிபர்,மாணவர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் bஐயலக்ஸ்மி,மலர்விழி,விஜயலச்சுமி,பிரபுராஜ்,ஆர்.சரவணன்,கதிரவன்,பா°கர் உள்ளிட்ட திரளனோர் இப்போராட்டத்தில் பங்கேற்று பெண்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி முழக்கமிட்டனர்

Sunday, December 30, 2012

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த டில்லி மாணவிக்கு புதுச்சேரியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.


புதுச்சேரி,டிச-30
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த டில்லி மாணவிக்கு புதுச்சேரியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

டில்லியில் ஓடும் பேரூந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழந்ததையொட்டி அவரக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் ஆகியோர்  சார்பில் கருப்பு சின்னம் அணிந்து மெழகு வத்தியுடன் ஊர்வலமாக சென்று  மவுண அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி பெரியார் சிலை எதிரே துவங்கிய அமைதி ஊர்வலத்திற்கு மாதர் சங்க துணை தலைவர் வி.சுமதி தலைமை தாங்கினார்.சங்கத்தின் பிரதேச தலைவர் தெய்வானை,செயலாளர் மாரிமுத்து, வாலிபர் சங்க தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் ஆர்.சரவணன்,மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும்  திரளான  மாதர்கள்,வாலிபர்,மாணவர்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலம் நேருவீதியை கடந்து கடற்கரை அருகில் அமைந்துள்ள பாரதியார் சிலை முன்பு முடிந்தது.பின்னர் அங்கு ஒரு நிமிடம் இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Monday, December 17, 2012

வாலிபர் சங்க உறுப்பினரை தாக்கிய சமூக விரோதியை கைது செய்யக் கோரி


புதுச்சேரி,டிச-16
வாலிபர் சங்க உறுப்பினரை தாக்கிய சமூக விரோதியை கைது செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கரிகலாம்பாக்கத்தில் வாலிபர் சங்க நடைபயணத்தை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரபு(எ)மணிகண்டன்,வினோத் ஆகிய இருவாலிபர்களை கூர்மையான ஆயூதங்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இத்தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்தும்.உடணடியாக வழக்குபதிவு செய்யக்கோரி இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டிஒய்எப்ஜ கிளை செயலாளர் சேகுவேராதாஸ் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் இரா.சரவணன்,துணை தலைவர் தட்சணாமூர்த்தி,சிபிஎம் இடைகமிட்டி செயலாளர் டி.முருகையன்,மற்றும் கொம்யூன் தலைவர் சண்முகம்,செயலாளர் கதிரவன்,இந்திய மாணவர் சங்க பிரதேசசெயலாளர் ஆனந்து,வி.தொ.ச நிர்வாகி ரத்திணவேலு உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

Sunday, December 9, 2012

வாலிபர்சங்க நடைபயணம்: புதுச்சேரியில் சிஐடியு, மாணவர்கள் எழுச்சிமிகு வரவேற்பு



புதுச்சேரி, டிச. 8-
வாலிபர் சங்க நடை பயண குழுவுக்கு புதுச்சேரி நகரத்தில் சிஐடியு சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.வேலைவாய்ப்பு, சுகா தாரம்,சுற்றுச்சூழல் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி யில் நடத்திவரும் நடைபய ணம் இண்டாவது நாளாக கருவடிக்குப்பம் பாரதியார் குயில் தோப்பில் இருந்து துவங்கியது. சித்தானந்தா கோவிலில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு சங் கத்தின் தமிழ்மாநில பொரு ளாளர் எஸ். பாலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் வெண்கொடியை அசைத்து நடைபணத்தை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச் சியில் சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன், உழவர்கரைநகர செயலாளர் லெனின்துரை, நடராஜன், டிஒய்எப்ஐ பிரதேச நிர்வாகி கள் சந்துரு, ப.சரவணன், இரா.சரவணன், பாஸ்கர், ஆழகப்பன்,கதிரவன் உள் பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சாமிப்பிள்ளை தோட்டம், முத்தையாள்பேட்டை, டி.பி தோட்டம் உள்ளிட்ட இடங்களை கடந்து பயணக் குழு புதுச்சேரி நகரத்தை அடைந்தது.சிஐடியு சார்பில் வரவேற்புபுதுச்சேரி காமராஜர் சிலை அருகில் நடைபயண குழுவை சிஐடியு சார்பில் வரவேற்றனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. முருகன் தலைமையில் அதன் நிர்வாகிகள் அளித்த எழுச்சி மிகு வரவேற்பில் ஏராள மானோர் கலந்துகொண்ட னர். முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக் குப்பம், கரிகலாம்பாக்கம் ஆகிய கிராமப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த நடைபயண பிரச்சாரம் பின் னர் பாகூரில் பொதுக் கூட்டத்தோடு நிறை வடைந்தது. எஸ்எப்ஐஇந்திய மாணவர் சங்க பிரதேசக்குழு சார்பில் புதுச்சேரி கல்வித்துறை எதி ரில் நடைபயண குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதேச செயலா ளர் ஆனந்து, துணைத் தலைவர் ரஞ்சித், நிர்வாகிகள் இன்னரசன், ரஞ்சித், பவித்திரன் உள் ளிட்ட திரளான மாணவர் கள் பயணக் குழுவை வர வேற்றனர்.







புதுச்சேரி,டிச-9
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நடைபயணக்குழுவை மேளதாளத்துடன் வரவேற்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி மதகடிப்பட்டில் இருந்து சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.பாலா தலைமையில் துவங்கிய நடைபயணக்குழு சனிக்கிழமை இரவு பாகூர் வந்தடைந்தது.டிஒய்எப்ஜ பாகூர் கொம்யூன்குழு சார்பில் மேற்குவீதியில் பயணக்குழுவை வரவேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.கொம்யூன் குழு தலைவர் அரிதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பயணக்குழு தலைவர் பாலா, தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,மாநில இணைச்செயலாளர் குணசுந்தரி,பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் இரா.சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி,தனிகா (எ)காத்தவராயன்,வெங்கடேசன் விவசாய சங்க பிரதேச தலைவர்கள் பத்மநாபன்,ராமசாமி,கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கலியன்,சாம்பசிவம், உள்ளிட்ட திராளானோர் பாங்கேற்று வாலிபர்கள் நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு அளித்தனர்.
கரிகலாம்பாக்கம்
கரிகலாம்பக்கம் நான்கு முனைசந்திப்பில் மேளதாளத்துடன் நடைபெற்ற வரவேற்பு நிகழ்சிக்கு வில்லியனுhர் கொம்யூன் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.செயலாளர் கதிரவன்,கிளை நிர்வாகிகள் அரிதா°,தேவ்ஆனந்து,விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முருகையன்,ரத்தினவேல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு வாலிபர்கள் நடைபயணக்குழு வரவேற்றனர்.

வாலிபர் சங்க நடைபயணம் எழுச்சியுடன் துவங்கியது


கொல்லங்கோடு, டிச. 1-மகாத்மா காந்தி தலைமை யிலான அன்றைய காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழக்கமிட்டு சமர்புரிந் தது; சோனியா காந்தி தலை மையிலான இன்றைய காங் கிரஸ் ‘வெள்ளையனே உள் ளே வா’ என்று சிவப்புக்கம் பளம் விரித்து வரவேற்கிறது என்று பாலபிரஜாபதி அடிக ளார் சாடினார். எங்கள் மக்கள் உழைப் பாளிகள்; அமெரிக்காவுக்கு இந்திய நாட்டை அடமானம் வைப்பதை ஒருபோதும் அவர் கள் ஏற்கமாட்டார்கள்; வால் மார்ட் கொள்ளையர்களை ஒரு போதும் அனுமதிக்கமாட்டார் கள் என்றும் அவர் முழக்க மிட்டார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து நடைபெறும் நடை பயண பேரி யக்கத்தை துவக்கி வைத்து பேசுகையிலேயே மேற்கண்ட வாறு அவர் குறிப்பிட்டார். “நம் வாழ்வும் நாடும் விற் பனைக்கல்ல” என்ற முழக் கத்தோடு தமிழகத்தின் 8 மையங்களிலிருந்து 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நீண்ட நடைபயண பேரியக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்துகிறது. முதலா வது குழுவின் பயணம் குமரி மாவட்டம் கொல்லங்கோட் டில் சனிக்கிழமை துவங்கியது.
வாலிபர் சங்கத்தின் மாநி லத் தலைவர் செ.முத்துக் கண்ணன் தலைமையிலான இக்குழுவின் நடைபயணத் தை துவக்கி வைத்து, வெண் கொடியை எடுத்துக்கொடுத்து உரையாற்றிய பாலபிரஜாபதி அடிகளார், “ரத்தம் சிவப்பு நிறம். ரத்தம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் என் னைப்பொறுத்தவரை உழைப் பாளிகளின் ரத்தமே உயர்ந்த ரத்தம்; அவர்களது உழைப் பைச் சுரண்டி உட்கார்ந்து சாப்பிடுவோர் ரத்தம் தாழ்ந்த ரத்தம்” என்று குறிப்பிட்டார். எந்த மதமும் சாதியையோ, வன்முறையையோ வலியுறுத்த வில்லை. ஏற்றத்தாழ்வை அங் கீகரிக்கவில்லை. ஆனால் மதத்தின் பெயரால் இங்கு அரசியல் நடத்தப்படுகிறது எனக்குறிப்பிட்ட அவர், இன் றைக்கு கோயில்களும் மடங் களும் மதவாதிகளின் கைகளி லும் சாமியார்களின் கைகளி லும் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றுக் குள்ளும் புகுந்து சுத்தப்படுத் தும் பணியை வாலிபர்கள் மேற் கொள்ள வேண்டுமென்றும் கூறினார். நாடு முழுவதுமுள்ள சபிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை கைகளில் ஏந்தி தேசம் காக்க நெடும்பய ணம் புறப்பட்டுள்ள வாலிபர் சங்கத்தின் போராட்டம் இன் னும் மகத்தானது என்று குறிப் பிட்ட அவர், ஏழைகளுக்காக நீதிகேட்டு சாதி கடந்து போராட வேண்டுமென்றும், சாதி என் பது ஒரு பேய் என்றும் சாடினார்.மக்கள் கோரிக்கைகளுக் காக தமிழக இளைஞர்களின் நடைபயணம் துவங்கியுள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதி யான கொல்லங்கோடு மகத் தான போராட்ட பூமி என்று குறிப்பிட்ட அவர், இந்தக்கோட் டில் துவங்கிய எந்த இயக்க மும் தோற்றதாக சரித்திரமில் லை என்று குறிப்பிட்டார். திரு வாங்கூர் மன்னனை எதிர்த்து, அவனது அதிகாரத்தையும் படைபலத்தையும் எதிர்த்து மக்கள் பலத்தோடு வைகுந்தர் போராடியதை நினைவு கூர்ந்தார். நடைபயண துவக்க நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். முருகேசன், கொல்லங்கோடு வட்டாரச் செயலாளர் விஜயமோகனன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பயணக்குழுவில் சங்கத் தின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் பாலசுப்ரமணியன், மாவட்ட தலைவர் புஷ்பதாஸ், செயலாளர் சசி, பொருளாளர் எபிலைசியஸ் ஜோயல், இணைச் செயலாளர் ரெஜீஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற் றனர்.நடைபயணம் அங்கிருந்து புறப்பட்டு நித்திரவிளை, புதுக் கடை வழியாக மதியம் வெட்டு வெந்நியை அடைந்தது. மாலை யில் அங்கிருந்து குழித்துறை, பாகோடு, மேல்புறம் வழியாக அருமனையை அடைந்தது. பயணக்குழு சென்ற இடங்க ளில் சிபிஎம், சிஐடியு, விவசா யிகள் சங்கம், கட்டுமானத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு வெகுஜன இயக்கங்களின் சார்பில் வர வேற்பு அளிக்கப்பட்டது.மாலையில் அருமனை யில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் மாநில தலைவர் முத் துக்கண்ணன் மற்றும் மாவட் டத் தலைவர்கள் பேசினர்.நடைபயண இயக்கம் ஞாயிறன்று காலை அருமனை யிலிருந்து புறப்பட்டு குலசேக ரம், திருவட்டார், ஆற்றூர் வழி யாக மதியம் சுவாமியார் மடத் தை அடைகிறது. மாலையில் அங்கிருந்து இரவிபுதூர்கடை, நட்டாலம் வழியாக கருங்கலில் நிறைவடைகிறது. அங்கு பொதுக் கூட்டம் நடைபெறு கிறது.





Monday, November 5, 2012

வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு திறந்த வெளி கருத்தரங்கம் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி,நவ-5

புதுச்சேரி அஜந்தா சிக்னல்  டி.பி தோட்டம் அருகில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி தலைவர் அழகப்பன் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்கத்தின் மத்திய கமிட்டி உறுப்பினர் ரமேஷ்பாபு,பிரதேச தலைவர் சந்துரு,செயலாளர் பி.சரவணன்,பொருளாளர் ஆர்.சரவணன்,நிர்வாகிகள் பாஸ்கர்,கதிரவன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ் மற்றும் மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.                                 

Thursday, September 27, 2012

வாழ்நாள் முமுவதும் மறக்கமாட்டோம் என்று வாலிபர் சங்க தலைவர்களுக்கு கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்த மக்கள்

புதுச்சேரி,செப்-27
புதுச்சேரி சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் தொகுதியில் பலமாதங்களாக மின் இனைப்பு இல்லாத அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த 38 குடும்பங்களுக்கு  மாதர்,வாலிபர் சங்கங்களின் முன்முயற்சியால் மின்சாரம் வழங்கப்பட்டது. புதுச்சேரி காமராஜர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகர் உள்ளது.இந்நகரில்  மொட்டை தோப்பு என்ற பகுதியில் பால மாதங்களாக குடியிருந்த 38 குடும்பங்களுக்கு  குடிசை மாற்று வாரியத்தால்  அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது.சுமார் 1கோடிக்கு மேற்பட்ட தொகையில்  கட்டப்பட்ட குடியிருப்புகள் கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு  முன்பு  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்படி ஒப்படைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இனைப்பு மட்டும் கொடுக்கப்பட வில்லை.நகரத்தை யொட்டி உள்ள இந்த குடியிருப்பில் மட்டும் மின் இனைப்பு இல்லாமல் கடந்த 18 மாதங்களாக  இருட்டிலே யே 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தகவலை  அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுவை பிரதேச துணைதலைவர் வி.சுமதி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் சரவணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஏன் மின் இணைப்பு பெறுவதற்கான  முயற்ச்சிகள் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.மேலும்  மின்துறை அதிகாரிகளை சந்தித்து  கேள்வி எழுப்பிய சங்க நிர்வாகிகளிடம் குடிசை மாற்று வாரியம் மின்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.9ஆயிரத்தி 460 மட்டும் செலுத்த வில்லை.அதானலே மின் இனைப்பு வழங்கபடவில்லை என்று கூறினார்.பின்னர் குடிசை மாற்று வாரியத்தின் அதிகாரிகளை சந்தித்து கேள்வி எழுப்பிய டிஒய்எப்ஐ தலைவர்கள்  ஒரி இரு நாட்களில் அத்தொகையை மின்சாரத்துறைக்கு செலுத்தவில்iல் என்றால் பொதுமக்களிடம் வாலிபர் சங்கம் உண்டியல் மூலம் வசூலித்து அத்தொகையை செலுத்தும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டம்
குடிசை மாற்று வாரியம்,மின்துறை அலட்சியத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்ககோரி மாதர் சங்கம்,வாலிபர் சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 3 ஆம்தேதி  புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள மின்துறையின் இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் இணைப்பு வழங்கப்பட்டது
குடிசை மாற்று வாரியம் உடனே மின்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.9ஆயிரத்து 460 யை செலுத்திய உடனே மின்துறை ஒரு வாரத்திற்குள் குடியிருப்புகளுக்கு மின்சார  இணைப்பு வழங்கியது.
தலைவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்த குடியிருப்பு மக்கள்
மின் இணைப்பு பெற்ற குடியிருப்பு மக்கள் சார்பில்  வாலிபர்,மாதர் சங்க தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்  சுதந்திர பொன்விழா நகரில் நடைபெற்றது. சிஜடியு மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம்,மாதர் ,வாலிபர் சங்க தலைவர்கள் சுமதி, சரவணன், பிரபுராஜ், விஜிய், அழப்பன், தமிழ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நீண்ட காலமாக அக்குடியிருப்பில் வசித்து வரும்   கலா  கூறுகையில்,கடந்த ஒன்றறை வருடங்களுக்கு முன்பு இந்த குடியிருப்பில் வசித்து வருகிறோம். தினந்தோரும் இரவு நேரங்களில் இருட்டிலேயே கொசுக்கடியிலேயே , பிள்ளைகளோடு வாழ்ந்து வந்துள்ளோம்.தேர்ந்தேடுக்க படுவதற்கு முன்பு உடனே மின்சாரம் பெற்று கொடுப்பேன் என்றெல்லாம் வாக்குறுதி அளித்த முன்னால் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான வெ.வைத்தியலிங்கம் தேர்வான பிறகு  இந்த பக்கமே ஆலே கானோம்.மக்கள் பிரதிநிதிகளே எங்களை பற்றி கவலை படவில்லை.நாங்களும் மின்சாரத்துறைக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீங்கள் எங்களுக்காக போராடி மின் இணைப்பு பெற்று தந்துள்ளிர்கள்.போராட்டம் நடத்த எங்களுக்கு அழைப்பு கோடுத்தபோது நாங்களும்  உங்களை உதாசீன படுத்தினோம். அப்போராட்டத்தில் ஒருவர் கூட பங்கேற்காதது மண வருத்தத்தை அளிக்கிறது.அதையும் மீறி எங்களது வாழ்க்கையில் ஒளி அமைத்து கொடுத்ததை தங்களது வாழ்நாள் முமுவதும் மறக்கமாட்டோம் என்று  வாலிபர் சங்க தலைவர்களுக்கு கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Wednesday, September 12, 2012

DYFI 9th ALL INDIA CONFERENCE , Bangalore

வாலிபர் சங்க மாநாடு துவங்கியது பெங்களூருவில் இளைய இந்தியா குழுமியது


பெங்களூரு (கேப்டன் லட்சுமி செகால் நகர்),செப்.11-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் 9வது அகில இந்திய மாநாடு பெங் களூருவில் செவ்வாயன்று மாபெரும் பேரணி - பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. மெஜஸ்ட்ரிக் ரயில் நிலையம் அருகிலிருந்து பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட வண்ணமிகு பேரணி அனைவரையும் கவர்ந்தது. மாநாட்டில் ஏற்ற வேண் டிய கொடி கூத்துப்பரம்பு தியாகிகள் நினைவாக கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தது. சிவப்பு நட்சத்திரம் பொறித்த இந்த வெண்கொடியை சிறுவர்கள் ஏந்தி வர அதன் பின்னால் சங்கத்தின் தேசிய தலைவர்களும் வெளிநாட்டு பிரதிநிதிகளும், தொடர்ந்து நீல நிற சீருடை அணிந்த மாநாட்டு பிரதிநிதிகள், அடுத்ததாக வெள்ளை சீருடையுடன் ஆயிரம் ஆயிரமாய் இளைஞர்களும் அணி வகுத்து வந்தனர். பல்வேறு மாநி லத்தவரும் அவரவர்களது பாரம் பரிய அடையாளங்களை வெளிப் படுத்தும் கலைநிகழ்ச்சிகளுடன் அணிவகுத் தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
பேரணியைத் தொடர்ந்து நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., கர்நாடக மாநி லத்தை சேர்ந்த பிரபல விடுதலைப் போராட்ட வீரர் எச்.எஸ்.தொரே சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஸ்ரீராமரெட்டி, கர்நாடக விவசா யிகள் சங்க தலைவர் ஜி.சி.பையா ரெட்டி, வாலிபர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, முன்னாள் செயலாளர் எம்.ஏ.பேபி, கர்நாடக மாநில தலைவர் என்.எல். பரத்ராஜ், செயலா ளர் பி.ராஜசேகர மூர்த்தி, துணை தலைவர் எஸ்.கண் ணன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.கூட்டத்தில் யெச்சூரி பேசும்போது, நாட் டின் மூன்றில் ஒரு பகுதியினராக உள்ள இளைஞர்கள் வளமான இந் தியாவை உருவாக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.40 வயதுக்கு உட்பட்ட இளைஞர் கள் இந்திய நாட்டின் மக்கள் தொகை யில் மூன்றில் இரண்டு பகுதியினராக உள்ளனர். இவர்கள்தான் நமது நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என் பதை தீர்மானிக்க வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டார்.உலகம் முழுவதும் இப்போது முதலாளித்துவத்துக்கு மாற்று பாதை குறித்த சிந்தனை மேலொங் கியுள்ளது. மதத்தின் பேரால் மக்களை துண்டாட அனுமதிக்காமல் இந்தியாவின் வளத் தை பாதுகாத்து ஒளிமய மான பாரதத் தை உருவாக்க இளை ஞர் சக்தி எழுச்சி பெற்று வர வேண்டும். சோச லிசம் ஒன்றே மாற்று என்பதை நிலை நாட்ட வேண்டும் என்று யெச்சூரி பேசினார். இக்கூட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி. ஸ்ரீராம கிருஷ்ணன் தலைமை வகித்தார்.பிரதிநிதிகள் மாநாடு பிற்பகலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 15ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது.

Monday, September 10, 2012

கூடங்குளத்தில் போலீஸ் தாக்குதல்

கூடங்குளத்தில் போலீஸ் தாக்குதல்
திருநெல்வேலி, செப். 10 -

நெல்லை மாவட்டம் கூடங்குளத் தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கடற்கரை பகுதிகளில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்திவந்த நிலையில் அவர்களை கலைக்க போலீசார் திங்களன்று தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக கூடங்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந் தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி திருச்செந்தூர் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்மீனவர் ஒருவர் பலியானார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே, அணு உலை எதிர்ப்பாளர் கள் திங்களன்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த நிலை யில், முற்றுகையை கைவிடுமாறு காவல்துறை கண்காணிப்பாளர் விஜ யேந்திர பிதாரி கேட்டுக் கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் முற்றுகையை கை விட மறுப்பு தெரிவித்தனர்.

அந்தநேரத்தில் போராட்டக் குழுவை சேர்ந்த 7 பேர் 2 படகுகளில் கடல்வழியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்பகுதி யில்,அணுமின் நிலைய சுற்றுச் சுவருக்கு அருகில் இறங்கினர். இத னை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்கச் சென்ற போது, அவர்கள் தாங்கள் வந்த படகில் ஏறி திரும்பிச் சென்று விட்டனர்.

இந்நிலையில் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற இடிந்த கரையை சேர்ந்த டென்சிலின் (வயது 45) உள்பட 2 பேர், போலீசாரின் தடுப்பை மீறி அணுமின் நிலையத் தை நோக்கிச் சென்ற போது அவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.

இதனைப் பார்த்த கடற்கரையில் அமர்ந்திருந்த போராட்டக் குழுவினர், டென்சிலின் உள்பட 2 பேரை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். போலீஸ் தடுப் பை மீறி முன்னால் வர முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிடித்துச் சென்றவர்களை விடு விக்க வேண்டும் என போராட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்ததால், 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

பத்திரிகையாளர்கள்

மீதும் தாக்குதல்

இத்தாக்குதலின்போது காவல் துறையினர் சில பத்திரிகையாளர் களையும் தாக்கினர். ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் புகைப்பட நிருபரிடமிருந்து கேமிராவை பறித்து கடலுக்குள் வீசியெறிந்தனர்.

இதனிடையே கடலுக்குள் சென்ற போராட்டக்காரர்களை கரைக்கு வரும்படி போலீசார் அழைத்தும் அவர்கள் வர மறுத்ததுடன் அங் கிருந்த படி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீ வைப்பு

இதனிடையே, போலீஸ் தடியடி யைத் தொடர்ந்து கூடங்குளம் கிரா மத்தில் பதற்றம் ஏற்பட்டது. தகவல றிந்த பொதுமக்கள் அங்கிருந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.

படகில் தப்பிய உதயகுமார்

இதனிடையே, கூடங்குளத்தில் போலீசார் தடியடி நடத்தியதும், அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கி ணைப்பாளர்கள் கடற்கரையில் தயாராக இருந்த படகில் இருந்து தப்பியோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் போலீசார் தடியடியை நடத்தத் தொடங்கியதும் கடலோரத் தில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் கிளாஸ் படகில் ஏறி அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கள் சுப.உதயகுமார், புஷ்பராயன், மைபா மற்றும் சில நிர்வாகிகள் அங்கி ருந்து முதல் ஆளாக தப்பினர். அவர் கள் கடலுக்குள் போய் விட்டார்களா அல்லது வேறு எங்காவது சென்றார் களா என்பது குறித்துத் தெரியவில்லை. இதையடுத்து இவர்களைப் பிடிக்க கடலோரப் பகுதியில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டுள்ளனர்.

முதல்வர் அவசர ஆலோசனை

இந்தப்பின்னணியில் கூடங்குளத் தில் நிலைமையை கட்டுக்குள் கொண் டுவருவது பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல மைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோ சனை நடத்தினார் என தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே, தூத்துக்குடியில் கூடங்குளம் மீனவர்களுக்கு ஆதர வாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (ந.நி.)

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 9வது அகில இந்திய மாநாடு பெங்களூரில் இன்று மாபெரும் பேரணி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 9வது அகில இந்திய மாநாடு  பெங்களூரில் இன்று மாபெரும் பேரணி
பெங்களூரு, செப். 10 -

இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாடு கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் செப்டம்பர் 11ம்தேதி பிரம்மாண்டமான பேரணியுடன் துவங்குகிறது.

நாடு முழுவதும் 1.5 கோடி இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள, உலகின் இரண்டாவது மிகப்பெரிய இளைஞர் இயக்கமாம் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 11 முதல் 15ம்தேதி வரை பெங்களூரு டவுண்ஹால் அரங்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி செவ்வாயன்று பெங்களூரு ரயில்நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் பேரணி துவங்குகிறது. நிறைவில் பானப்பா பூங்காவில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி துவக்கி வைக்கிறார். இந்தக்கூட்டத்தில் சமூகப்போராளியும் நாடறிந்த கலைஞருமான மல்லிகா சாராபாய் உரைநிகழ்த்துகிறார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கேரள முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, விடுதலைப்போராட்ட வீரர் எச்.எஸ்.தொரசாமி, வாலிபர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் முகமது சலீம், கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.ஸ்ரீராமரெட்டி, ஜி.சி. பையாரெட்டி ஆகிய தலைவர்கள் உரைநிகழ்த்துகின்றனர்.

சங்கத்தின் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற உள்ள இப்பொதுக்கூட்டத்தில் எஸ்.கண்ணன் உள்ளிட்ட அகில இந்திய நிர்வாகிகள், பி.ராஜசேகர மூர்த்தி உள்ளிட்ட கர்நாடக மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

மாநாடு

இதைத்தொடர்ந்து அன்று மாலை 5 மணியளவில் பெங்களூரு டவுண்ஹாலில் மாநாட்டுத் துவக்கவிழா நடைபெறுகிறது. வரவேற்புக்குழுத் தலைவர் டாக்டர் பரகுரு ராமச்சந்திரப்பா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

மாநாட்டைத் துவக்கி வைத்து பிரபல திரைப்பட இயக்குநர் டாக்டர் ஷியாம் பெனகல் உரையாற்றுகிறார்.

எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 12 முதல் 15 வரை பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

கொடிமரப் பயணம்

இம்மாநாட்டை நோக்கி, சென்னையிலிருந்து கொடிமரம் கொண்டுசெல்லும் பயணம், சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சைலேந்திர காம்லே தலைமையில் புறப்பட்டது. இப்பயணக்குழுவிற்கு காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. திங்களன்று மாலை ஓசூரில் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று காலை இப்பயணக்குழு பெங்களூரு வந்தடைகிறது.

இக்குழுவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், செய லாளர் ஆர்.வேல்முருகன், பொருளாளர் எஸ்.பாலா, துணைத் தலைவர் இல.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து, வாலிபர் சங்கத்தின் 10லட்சத்து 53 ஆயிரம் உறுப்பினர்களது பிரதிநிதிகளாக 45 பேர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

Monday, September 3, 2012

ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,செப்ட-3
 புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி மாதர், வாலிபர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதந்திரபொன்விழா நகரில் உள்ள குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு கடந்த ஒன்றறை ஆண்டுகாளாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்தும்,உடனடியாக 38  அடுக்கு மாடி குடியிப்புகளுக்கு புதியமின் இணைப்பு வழங்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் சுமதி,டிஒய்எப்ஐ உழவர்கரை நகரகமிட்டி தலைவர் பாஸ்கர், முன்னால் பிரதேச பொருளாளர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள் அழகப்பன்,அன்துவான்,பிரதாப்,அருள் ,மற்றும் கசாப்புகாரன் தோட்டத்தில் குடியிருக்கும் மக்கள் உள்ளிட்ட மாதர்சங்கங்களை சேர்ந்த பெண்கள் திரளானோர் போராட்டத்தல் பங்கேற்றனர்.இறுதியாக உதவி பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Wednesday, August 15, 2012

66th Independence Day

Friday, June 1, 2012

புதுச்சேரி,மே-24
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்துள்ள பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் வாலிபர் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நான்காம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மக்களுக்கு கொடுத்துள்ள பரிசாக  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50பைசா உயர்த்தியதை கண்டிக்கும் வகையில் இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் புதனன்று புதுச்சேரி சட்டமன்றம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு இனிப்பு மிட்டாய் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.மத்திய அரசின் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு நடந்த நிகழ்சிக்கு டிஒய்எப்ஐ நகரகமிட்டி செயலாளர் சாரதி தலைமை தாங்கினார்.பிரதேச தலைவர் சந்துரு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.பிரதேச பொருளாளர் இரா.சரவணன்,உழவர்கரை தலைவர் பாஸ்கர்,முன்னாள் பொருளாளர் பிரபுராஜ்,மற்றும் அன்துவான்,எஸ்எப்ஜ பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மாணவர்கள் இந்த நுhதன நிகழ்சியில் பங்கேற்றனர்.இனிப்பை பெற்றுகொண்ட அணைவரும் தங்கள் எதிர்ப்பை மத்திய காங்கிரஸ் அரசு மீது பதிவு செய்தது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

மாணவர்கள் மர்மச்சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி

புதுச்சேரி,மே-21
மணக்குள விநாயகர் மருத்துவகல்லுhரி நடந்து வரும் மாணவர்கள் மர்மச்சாவு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவர் வாலிபர் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள  மணக்குள விநாயகர் மருத்துவகல்லுhரியில் இரண்டு மாணவிகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் குற்றங்களை விசாரிக்க நீதிபதி தலைமையிலான தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.இறந்த மாணவியின் குடும்பத்தாரிடம் வசூலித்த நன்கொடை ரூ30லட்சத்தை கல்லுhரி நிர்வாகம் திரும்ப கொடுக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் ஹரிஹரன் வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன் கூட்டாக தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன்,பிரதேச செயலாளர் பி.சரவணன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ்,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து,துணைதலைவர் ரஞ்சித்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பாஸ்கர்,தட்சணாமூர்த்தி ,அரிதாஸ்,விஜி உள்ளிட்ட திரளான  வாலிபர்கள்,மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Saturday, May 19, 2012

புதுச்சேரி,மே-15
தகுதி தேர்வுக்கான தேர்வு ரத்து செய்து வெளிப்படை தன்மையுடன் ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிபணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.இதற்கு மாறாக புதுச்சேரி அரசு தமிழகத்தை போல தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்பதற்காக திடீர் என்று தமிழக அரசிடம் அனுமதி பெற்று குறுகிய காலஅவகாசம் உள்ள நிலையில் இத்தேர்வு எழுத வேண்டும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அறிவிப்பு வெளியிட்ட தினத்தில இருந்து நான்கு நாட்களுக்குள்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவேண்டும் என்பது பல்வேறு குழப்பங்பகளை ஏற்படுத்தும்.
மேலும் ஜுன்-3 ஆம் தேதி  தேர்வு நடைபெறுவது  குறுகிய இடைவேளியில் இத்தேர்வு நடத்துவது படித்த இளைஞர்கiள் ஏமாற்றகூடியது.
இரண்டான்டு பட்டய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஓராண்டு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு பணிக்காக காத்து இருக்கும் ஆசிரியர்களுக்கு மறுபடியும் ஓர் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவைதானா?அப்படியே அரசின் போக்கு சரி என்று கூறினாலும் ஏன் புதுச்சேரி அரசு தனி ஒரு தேர்வணையம் ஏற்படுத்தகூடாது? எனவே நடைபெற உள்ள தகுதி தேர்வினை ரத்து செய்து வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்திகிறது.இவ்வாறு பிரதேச செயலாளர் ப.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுச்சேரி,மே-13
அரசு காலிபணியிடங்களில் ஒப்பந்த முறையில் பணி நியமணம் செய்வதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று டிஒய்எப்ஐ புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்த்தின் புதுச்சேரி பிரதேச சிறப்பு பேரவை கூட்டம் லா°பேட்டை ஜவஹர் பவனில் நடைபெற்றது.இப்பேரவைக்கூட்டத்திற்கு சங்கத்தின் பிரதேச தலைவர் கே.சந்துரு தலைமை தாங்கினார்.பேரவைகூட்டத்தை டிஒய்எப்ஐ தமிழ் மாநில இணைசெயலாளர் எ°.லெனின் துவக்கிவைத்து பேசினார்.டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் தமிழ்செல்வன்,பொருளாளர் பிரபுராஜ்,உழவர்கரை கமிட்டி தலைவர் பா°கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட திரளான வாலிபர்கள் பங்கேற்ற பேரவை கூட்டத்தில்  சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன் முடித்து வைத்து பேசினார். புதிய நிர்வாகிகள் இப்பேரவை கூட்டத்தில் புதுச்சேரி  பிரதேச   தலைவராக கே.சந்துரு,செயலாளராக பா.சரவணன்,பொருளாளராக இரா.சரவணன்,உள்ளிட்ட 23பேர் கோண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் இப்பேரவையில் நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள் வருமாறு,தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்திட தமிழகத்தை போல் கல்வி நிர்ணய குழுவை புதுச்சேரியில் அமைக்க வேண்டும்.புதுச்சேரி அரசுதுறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தமுறையில் நிரப்புவதை கைவிட்டு, நிரந்த ஊழியர்களாக  நிரப்ப  வேண்டும்.அரசு அறிவித்த வேலையில்லா கால நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

Wednesday, May 9, 2012

புதுச்சேரி,மே-8
தோழர்.விபி சிந்தன் நினைவுதினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் இலவச மோர் பந்தல் வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.
புதுச்சேரி முத்து மாரியம்மன் கோவில் வீதி,காந்திவீதி சந்திப்பில் நடந்த இந்நிகழ்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி தலைவர் அழகர்ராஜ் தலைமை தாங்கினார்.நகரகமிட்டி பொருளாளர் விஜிய் முன்னிலை வகித்தார்.இலவச மோர் பந்தலை டிஒய்எப்ஐ பிரதேச துணை தலைவர் சரவணன் துவக்கிவைத்தார்.பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,சிஐடியு மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம்,வாலிபர் சங்க நிர்வாகிகள் அன்துவான் உள்ளிட்ட திரளானோர்  கலந்து கொண்டனர்.

Tuesday, March 27, 2012

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை


புதுச்சேரி,மார்ச்-26

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை புதுச்சேரியில் நடைபெற்றது.
வாலிபர்,மாணவர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரி வினோபா நகர் தேவாலயத்தில் ஞாயிற்றுகிழமை (மார்ச்-25) நடந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். காலை 9மணிக்கு துவங்கிய இப் பயிற்ச்சி பட்டறையில் தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வின் போது எளிய முறையில் மதிப்பென்கள் பெறுவதற்கு ஆசிரியர்கள் பயிற்ச்சி நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,துணை தலைவர் சரவணன்,கிளை தலைவர் அந்துவான்,செயலாளர் லாமார்க்,எ°.எப்.ஐ பிரதேச செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர்.

பாகூர் பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும்


புதுச்சேரி,மார்ச்-26

பாகூர் பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று வாலிபர் சங்க கொம்யூன் மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் பாகூர் கொம்யூன் கமிட்டி மாநாடு பாகூரில் உள்ள பகத்சிங் படிபகத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு கொம்யூன் கமிட்டி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.மாநாட்டை பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன்துவக்கிவைத்து பேசினார்.கொம்யூன் செயலாளர் அரிதா° வேலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். பிரதேச துணை தலைவர் சரவணன் வாழ்த்தி பேசினார்.இம்மாநாட்டில் புதிய கொம்யூன் தலைவராக ரா.வெங்கடேசனும்,செயலாளராக வ.அரிதாசும்,பொருளாளராக தணிகா உள்ளிட்ட 15பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யயப்பட்டனர்.
பாகூர் கொம்யூனில் நுhறுநாள் வேலை உறுதிதிட்டத்தை உடனே துவக்க வேண்டும்.கொம்யூனில் உள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்து நிரந்தர பணியாக மாற்ற வேண்டும்.பேருந்து நிலைய பணிகளை உடனே துவக்க வேண்டும்.பாகூரில் மருத்துவமணையின் தரம் உயர்த்தி 24 மணிநேரமும் செயல்படுகின்ற மருத்துவமணையாக மாற்ற வேண்டும்.விளைநிலங்களை ரியல் எ°டேட்டாக மாற்றப்படுவதை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Saturday, March 24, 2012

மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்



Puducherry 23-March-2012,DYFI Town Committee conducted Bhagath Singh,Rajaguru,Sugadev 81st anniversary day near Ajantha Signal,Puducherry

புதுச்சேரி 23 மார்ச் 2012 ,
மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் D P தோட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது.இப்பெயர்பலகை திறப்பு விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் நகர செயலர் பார்த்தசாரதி தலைமை தாக்கினார் ..பிரதேச பொருளாளர் பிரபுராஜ்..பிரதேச துணை தலைவர் சரவணன் ,நகர தலைவர் அழகப்பன் ,பொருளாளர் விஜி ,கமிட்டி உறுப்பினர்கள் வெற்றிவேல், ஜேம்ஸ் , அந்துவன் ,முருகன் , உழவர்கரை நகர செயலர் பாஸ்கரன் ,இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.கிளை தோழர்கள் தமிழரசன் ,நரேன் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மற்றும் பகுதி மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Tuesday, March 13, 2012

புதுச்சேரி நகரபகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது

புதுச்சேரி,மார்ச்-12
புதுச்சேரி நகரபகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகர கமிட்டி மாநாடு முதலியார் பேட்டையில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு கமிட்டியின் தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.மாநாட்டை துவக்கிவைத்து பிரதேச தலைவர் சந்துரு பேசினார்.வேலை அறிக்கையை சங்கத்தின் செயலாளர் பார்த்தசாரதி தாக்கல் செய்தார்.சங்கத்தின் பிரதேச பொருளாளர் பிரபுராஜ்,சிஐடியு நிர்வாகிகள் மது,மதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.டிஒய்எப்ஐ பிரதேச செயளாலர் தமிழ்ச்செல்வன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.இம்மாநாட்டில் புதிய நகரகமிட்டி தலைவராக அழகப்பன்,செயலாளராக பார்த்த சாரதி,பொருளாளராக விஜிய் உள்ளிட்ட 11பேர் கொண்ட நகரகமிட்டி தேர்வு செய்யப்பட்டது.மாநாட்டில் நகரபகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த வேண்டும்.முத்தியாள்பேட்டை கசாப்புகாரன் தோப்பில் வசித்த மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வேண்டும்.அரியாங்குப்பம் சண்முக நகரில் கழிவுநீர் வாய்க்காள்,சாலைவசதிகளை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநட்டில் வலியுறுத்தப்பட்டது

Sunday, March 11, 2012

புதுச்சேரி நகரகமிட்டி மாநாட்டை விலக்கி தெருமுனைப்பிரச்சாரம்


புதுச்சேரி,மார்ச்-5
தெருமுனை பிரச்சாரம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகரகமிட்டி மாநாட்டை விலக்கி தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.அரியாங்குப்பத்தில் துவங்கிய பிரச்சாரம் முதலியார்பேட்டை,நெல்லித்தோப்பு,சின்னமணிகூண்டு,நேருவீதி,முத்தியாள்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில் டிஒய்எப்ஐ பிரதேச செயலாயர் தமிழ்ச்செல்வன்,நகரகமிட்டி தலைவர் சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் பங்கேற்று பேசினாகள்.

Sunday, February 12, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்ககோரி


புதுச்சேரி,பிப்-12
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்ககோரி வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

டீசம்பர் 30 ஆம்தேதி புதுச்சேரியை தாக்கிய தானே புயலால் மக்கள் தங்களது குடிசை வீடுகளையும்,ஓட்டு வீடுகளையும் இழந்தனர். விவசாயிகள் மீனவர்கள் தங்களது நிலங்களையும்,படகுகளையும் இழந்தனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உடனடியாக நிவாரணம் வழங்கமால் காலங்கடத்தி வருவதை கண்டித்தும்.மாநில அரசு கோரிய நிவாரணத்தொகை 2500கோடியை மத்திய அரசு உடனே வழங்ககோரி இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கண்டன ஆர்பு;பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி; அரியாங்குப்பத்தில் நடந்த ஆர்ப்;பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகரகமிட்டி செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.சிபிஎம் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ்,டிஒய்எப்ஜ பிரதேச துணைத்தலைவர் சரவணன்,உழவர்கரை செயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,முன்னால் நிர்வாகி துரைமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள் பங்கேற்றனர்.

Thursday, February 9, 2012

ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி மாகேவில் நடைபெற்றது



புதுச்சேரி,பிப்-4
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கம் சார்பில் ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி மாகேவில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 64வது நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி பொதுக்கூட்டம் மாகே முனிசி;பலிட்டி மைதானத்தில் நடைபெற்றது.இப்பொதுகூட்டத்திற்கு டிஒய்எப்ஐ மாகே செயலாளர் நவுசாத் தலைமை தாங்கினார்.தலைச்சேரி செயலாளர் விகேஷ் முன்னிலை வகித்தார்.முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.குஞ்சுராம்,வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன்,துணைத்தலைவர் சரவணன்,ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்கள்.இறுதியாக ஊழலை எதிர்த்து உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக தலைச்சேரி பகுதியில் இருந்து மாகே வரை 500க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

Saturday, January 21, 2012

இந்திய ஐனநாயவாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழர் புதுச்சேரியில் நடைபெற்றது



புதுச்சேரி,ஐன-17
இந்திய ஐனநாயவாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழர் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி இலாஸ்பேட்டை அசோக்நகர் பாரதியார்சாலையில் நடந்த இரண்டாம் ஆண்டு பொங்கல் விiளாட்டு போட்டி பரிசளிப்பு விழாவிற்கு எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஐ;,சென்னை உயர்நீதிமன்ற வழகறிஞர் ஸ்டாலின், டிஒய்எப்ஐ நகரகமிட்டி தலைவர் சரவணன்,உழவர்கரைநகர செயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க தலைவர் அரிகரன்,துணைதலைவர் ரஞ்சித்,மாதர் சங்க செயலாளர் சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.
கோலப்போட்டி,ஓட்டபந்தயம்,ஓவீயபோட்டி,உறிஅடித்தல்போட்டி,சைக்கிள்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.வாலிபர்சங்க கிளையை சேர்ந்த நிர்வாகிகள் பாலாஜி,ரோகன்,ராம்கோபல் உள்ளிட்ட திரளானொர் விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக தேனி சங்கமம் குழுவினரின் தப்பாட்டம்,சிலம்பாட்டம்,ஒயிலாட்டமும் நடைபெற்றது.

Thursday, January 12, 2012

பத்திரிக்கை செய்தி - புதுச்சேரி தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர்


புதுச்சேரி தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். விவசாயிகள் விவசாய விளை நிலங்கள் சேதமடைந்துள்ளது. மீனவர்கள் முழுமையாக அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏழைகள் குடிசைகளை இழந்துள்ளனர். மின்சாரம் முழுமையாக கிராமங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இயந்திரம் மிக மிக மெதுவாக நகர்கிறது, இது சரியல்ல. புதுச்சேரி அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் புதுச்சேரி மக்களை பாதுகாக்க தற்காலிகமாக தங்கும் இடம், இரவு நேரங்களில் மின்சாரம், சுத்தமான குடிநீர் வழங்கவும், உணவு ஏற்பாடு செய்யவும் அரசு இயந்திரங்களை முடிக்கிவிட வேண்டும்.

 அனைத்து ஊர்களில் நிவாரண குழு, மீட்பு பணி குழுவை அமர்த்த வேண்டும்.
 பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக பாதுகாக்கும் வகையில் நிவாரண பணிகளை மிக வேகமாக அமுல்படுத்த வேண்டும்.
 புதுச்சேரி அரசின் மனித வளம் குறைப்பாட்டை சரி செய்ய NCC/NSS மாணவர்களையும், வாலிபர்களையும் மீட்பு பணியில் ஈடுபடுத்த
வேண்டும்.
 தன்னார்வம் உள்ள இளைஞர்களை அரசு அழைத்து மீட்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
 புதுச்சேரியில் உள்ள மாணவர்கள், வாலிபர்கள் நமது புதுச்சேரியை பாதுகாக்க மீட்பு பணியில் தங்களை இணைத்துக் கொண்டு புதுச்சேரியை
மீண்டும் கட்ட வேண்டும் என்று வாலிபர் சங்கம் மிக தாழ்மையுடன் கேட்க்கொள்கிறது.

இப்படிக்கு



(த.தமிழ்செல்வன்)
பிரதேச செயலாளர்
DYFI