இலாஸ்பேட்டை குறவர்பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதரக்கோரி டிஒய்எப்ஐ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
புதுச்சேரி இலாஸ்பேட்டை விமான நிலையம் பின்புள்ள குறவர்பேட்டையில் தெருமின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.குடியிருப்புகளில் துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.மாதம் ஒரு முறை குறவர் இன மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ், பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் இரா.சரவணன்,நகர தலைவர் அழகப்பன் ஆகியோர் சாரத்தில் உள்ள மாவட்ட துணை ஆட்சியர் வின்சென்ட்ராயரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்று கொண்ட துணைஆட்சியர் சங்கநிர்வாகிகளிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.