Friday, January 4, 2013

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

புதுச்சேரி,ஜன-4
வன்கொடுமைக்கு ஆளான  மாணவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.
புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த பிளஸ்டு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்பட்டு  அரசு மகளிர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பும், அவரது மறுவாழ்வுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தரக்கோரி இந்தியமாணவர் சங்கம் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அiப்புகள்  வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுயிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
பாதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களையும் புதுச்சேரி அரசே ஏற்க வேண்டும்.இந்த வழக்கு விசாரணையை  சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.வன்கொடுமைக்கு ஆளான மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும்.அவரது உயர்படிப்புக்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும்.உச்சநீதிமன்ற வழிகாட்டுகினங்க அனைத்து கல்லுhரி மற்றும் பள்ளிகளிலும் பெண்கள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.விரைவு நீதிமன்றம் மூலமாக மாணவியின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திராகாந்தி அறிவியல் கலைக்கல்லுhரி,மோதிலால் நேரு மற்றும் மகளிர்  பாலிடெக்னிக்,சமுதாய கல்லுhரி,மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஐர் கல்லுhரி  உள்ளிட்ட கல்லுhரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.பின்னர் மாவட்ட பொருப்பு ஆட்சியர் சுந்தரவடிவேலுவை சந்திக்க அனைத்து மாணவர்கள் பிரதிநிதிகள் சந்திக்க முற்பட முயற்சித்தனர் அப்போது காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கோரிக்கை ஏற்பு
இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணை தலைவர் ரஞ்சித்,விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன்,டிஒய்எப்ஐ பொருளாளர் சரவணன் உள்ளிட்ட இதர ஜனநாய அமைப்புகளின் பிரநிதிகள் பாலா,சதீஸ்,பிரசன்னா,அன்துhவன் உள்ளிட்டோர் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் சுந்தரவடிவேலுவை சந்தித்து பாதிக்கப்ட்ட மாணவிக்கு மேற்கொண்ட கோரிக்ககை வலியுறுத்தினர்.இதனை ஏற்றுகொண்ட ஆட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.இதனை தொடர்ந்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
இவ்வழக்கு சிஐடிக்கு மாற்றம்
மாணவிக்கு அனைத்து மருத்துவ செலவுகளையும்,மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.  இவ்வழக்கை விசாரிக்க குற்றபுலனாய்வு துறைக்கு (சிஐடி) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.மேலும் புகாரை பதிவு செய்ய மருத்த திருபுவனை,வில்லியனூர் அனைத்து மகளிர் காவல்நிலை ஆய்வாளர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறுப்பு ஆட்சியர் சுந்தரவடிவேலு  பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment