Sunday, January 20, 2013

வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி பிரதேசம் அளவி லான கைப்பந்து போட்டி


வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கைப்பந்து போட்டி
புதுச்சேரி, ஜன. 19-வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி பிரதேசம் அளவி லான கைப்பந்து போட்டி லாஸ்பேட்டையில் நடைபெற் றது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உழவர்கரை கமிட்டி சார்பில் வருகிற குடியரசு தினத்தன்று 22வது குடி யரசு தின கலைவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறு கிறது. இவ்விழா முன்னிட்டும் மறைந்த முன்னாள் உழவர் கரை மேயர் நாராயணசாமியின் 100 வது ஆண்டை யொட்டி விளையாட்டு வீரர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி யில் சிபிஎம் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் எஸ்.லெனின்துரை பங்கேற்று விளையாட்டு வீரர்களை கைகுலுக்கி போட்டியை தொடக்கி வைத்தார். டிஒய் எப்ஐ பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன், உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் அக்கீம், முரளி, எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து, துணைத்தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் பங்கேற்றனர்.இப்போட்டியில் வெற்றிபெரும் வீரர்களுக்கு 26ஆம் தேதி சாமிப்பிள்ளைத்தோட்டத்தில் நடைபெறும் விழா வில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment