புதுச்சேரி,ஜன-30
கல்லூரி மாணவியை கட்டாய பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயன்றவர்களை கைது செய்யக்கோரி மாணவர் வாலிபர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி சூர்யா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) இவர் புதுச்சேரி அடுத்து பாகூரில் உள்ள ஆல்பா பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்கும் சூர்யாவை, விடுதி வார்டனாக உள்ள சந்திரா என்பவர் கட்டயா பாலியல் தொழிலுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கைஎடுக்காத நிர்வாகம் வாடன் சந்திராவிற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் மாணவியின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் அடியாட்கள் வைத்து மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பாகூரி காவல்நிலைய உதவி ஆய்வாளரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.இப்புகார் மீது நடவடிக்கை எடுககாத காவல்துறையை கண்டித்தும்,குற்றவாலிகளை உடனே கைது செய்யக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,வாலிபர் சங்க பிரதேச செயலாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன்,நிர்வாகிகள்,ரஞ்சித், வழக்கறிஞர் தட்சணாமூர்த்தி,கதிரவன்,பா°கர்,விஜி,அழகப்பன்,சண்முகம் உள்ளிட்ட திரளான வாலிபர்கள்,மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment