Saturday, January 19, 2013

சோலை நகர் சமூதாய நலக்கூடத்தை உடனே திறக்க கோரி

புதுச்சேரி,ஜன-18
சோலை நகர் சமூதாய நலக்கூடத்தை உடனே திறக்க கோரி  தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள சோலைநகர் சமூதாய நலக்கூடம் ரூ.70லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகி இன்னும் திறக்கவில்லை.இதனால் மக்கள் தங்களின் சுபநிகழ்சிகளை  தனியாருக்கு சொந்தமான கல்யாண நிலையத்தில் அதிக பணம் கொடுத்தும் நடத்த வேண்டிய நிலை உள்ளது.எனவே இக்கோரிக்கையை முன்வைத்தும் உடனடியாக சமூதாய நலக்கூடத்தை திறக்ககோரி  இப்போராட்டம் நடைபெற்றது.
சமூதாய நலக்கூடம் எதிரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர கமிட்டி பொருளாளர் விஜி தலைமை தாங்கினார்.சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பிரபுராஜ்,பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன்,மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர்,தட்சணாமூர்த்தி,கதிரவன் இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ,ஆட்டோ சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்று பேசிய வாலிபர் சங்க நிர்வாகிகள்  இன்னும் ஒரு மாதத்தில் சமூதாய நலக்கூடத்தை திறக்கவில்லை என்றால் அப்பகுதி மக்களை திரட்டி புதுச்சேரி நகராட்சி ஆனையரை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்தனர்.

No comments:

Post a Comment