Friday, October 25, 2013

அரங்கனூரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்ககோரி பானை உடைப்பு போராட்டம்

புதுச்சேரி,அக்.25-
 
அரங்கனூரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்ககோரி பானை உடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

புதுச்சேரி அடுத்துள்ள பாகூர் அரங்கனூரில் தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனையை போர்காலஅடிப்படையில் தீர்க்க வேண்டும்.மக்கள் தொகைக்கு ஏற்ப்ப நீர்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.இலவச மனைப்பட்டா உடனே வழங்க வேண்டும்.அரங்கனூர் முழுவதும் சாலைவசதி,கழிவுநீர் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

அரங்கனூர் நீர் தேக்க தொட்டி முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு  வாலிபர் சங்கத்தின் கிளைத்தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் இரா.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,முன்னாள் பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் ,பாகூர் கொம்யூன் செயலாளர் அரிதாஸ்,செயலாளர் வெங்கடேசன்,பொருளாளர் தனிகா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.கிளைச்செயலாளர் புஸ்பராஜ்,விமல் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக கொம்யூன் நிர்வாகத்தை கண்டித்து வாலிபர்கள் குடிநீர் பானைகளை உடைத்து முழக்கமிட்டனர்.

D Y F I Mannadipet Committee Agitation in Market Street at Madagadipet to eliminate liquor shop

D Y F I Mannadipet Committee Agitation in Market Street at Madagadipet to eliminate liquor shop near School , College , Temple and Marriage Hall
புதுச்சேரி,அக்.26-
புதிய மதுபானகடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மதகடிப்பட்டுல் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ள நிலையில் பேரூந்து நிறுத்தத்தில் புதியதாக மதுபான கடை திறப்பதற்கு அனுமதி வழங்கியதை உடனே திரும்பபெற வேண்டும்.ஏற்கனவே அப்பகுதியில் செயல்படும் மதுபானகடைகளை  கட்டுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மதகடிப்பட்டில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்க கொம்யூன் தலைவர் கார்க்கி தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் இரா. சரவணன்,துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி,செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிரவன்,விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள்  கலிவரதன், உலகநாதன்,சரவணன்,மாணவர் சங்க செயலாளர் ஆனந்து ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று பேசினார்கள்.இப்போராட்டத்தில் திரளான அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.

Tuesday, October 15, 2013

சேகுவேரா நினைவு தினத்தில் கோரிக்கை தின தெருமுனைக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.



புதுச்சேரி,அக்.10-
சேகுவேரா நினைவு தினத்தில் கோரிக்கை தின தெருமுனைக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்.ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசு பணிகளில் ஒப்பந்த முறையில் நியமிப்பதை உடனே கைவிடவேண்டும்.ஏ.எப்.டி பஞ்சாலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்து வரும் சமூக குற்றங்களை கட்டுபடுத்த புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சுதேசி பஞ்சாலை எதிரில் நiபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் இரா.சரவணன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிவரவன்,நிர்வாகிகள் மோகன்,யோகராஜ்,நாகமுத்து ,இந்திய மாணவர் சங்க பிரதேச தலைவர் அருண் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக சேகுவேராவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.



Place : -Government Boys I T I Campus, Puducherry

Wednesday, October 2, 2013

இந்திய இறையான்மையை பாதுகாக்க வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

OCT 2nd 2013 - MAHATMA GANDHI JANTHI - STREET CORNER DEMONSTRATION NEAR MUTHIALPET BHARATHI MANIKUNDU - AGAINST COMMUNAL CLASHES IN INDAI

புதுச்சேரி,அக்.3
இந்திய இறையான்மையை பாதுகாக்க  வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மகாத்மா காந்தி பிறந்தநாளில் இந்திய இறையான்மையை பாதுகாக்க வலியுறுத்தியும்,சாதி மத மோதல்கள் அற்ற சமூகத்தை உருவாக்ககோரி இந்நிகழ்ச்சி  நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதி மணிகூண்டு எதிரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அருண்குமார்,ஞானசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன்,துணைத்தலைவர் பாஸ்கர்,பொருளாளர் கதிவரவன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ் நகரகமிட்டி  நிர்வாகிகள் அழகப்பன்,பிரதாப், நாகமுத்து ,மற்றும் நவீன்,சியாம் உள்ளிட்ட திரளானோர் இந்நிகழ்ச்சியில்  பங்கேற்றனர்.