Saturday, June 27, 2015

குமார் ஆனந்தன் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் போதைக்கு எதிரான பிரச்சாரம் துவங்கியது.

புதுச்சேரி,ஜீன்.27-
குமார் ஆனந்தன் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் போதைக்கு எதிரான பிரச்சாரம் துவங்கியது.


கள்ளசாராயத்தை எதிர்த்து போராடி உயிர்நீத்த கடலூர் தியாகிகள் குமார் – ஆனந்தன் ஆகியோரது 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொலை,கொள்ளைகளுக்கு மூலகாரணமாக விளங்கும் போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும், ஆட்சியாளர்கள் இதனை கட்டுபடுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்ககோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி முழுவதும் மூன்று மாத காலங்களுக்கு பொதைக்கு எதிராக ஊரைக்கூட்டுவோம் என்ற பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.

துவக்க நிகழ்ச்சி
 போதைக்கு எதிரான பிரச்சாரம் இயக்கம் முத்தியால்பேட்டை மணிகூண்டு எதிரில் சனிக்கிழமை துவங்கியது. இப்பிரச்சாரத் துவக்கநிகழ்ச்சிக்கு  டிஒய்எப் நகரகமிட்டி துணைத்தலைவர் கே.நாகமுத்து தலைமை தாங்கினார். போதைக்கு எதிராக நடைபெறும் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன், பொருளாளர் து.கதிரவன், துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் வாலிபர் சங்கத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்கள். நகரகமிட்டி செயலாளர் அழகப்பன், நிர்வாகிகள் நவீன், தமிழ், விஐய், சபரி உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

போதைக்கு எதிரான இப்பிரச்சாரம் தொடர்ந்து மூன்று மாதங்கள் புதுச்சேரி முழுவதும் நடைபெறுகிறது.

Sunday, March 22, 2015

ஏ.எப்.டி , சுதேசி , பாரதி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.ஏ.எப்.டி , சுதேசி , பாரதி பஞ்சாலைகளை நவீனபடுத்தி வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்.சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு கழகம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்ளை உடணடியாக கைது செய்ய வேண்டும்.தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்.அரசு பள்ளிகளை பாதுகாத்து மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதி, நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி, பொருளாளர் கதிரவன், நிர்வாகிகள் அரிதாஸ், பாஸ்கர் , மாதர் சங்க செயலாளர் சத்தியா, மாணவர் சங்க நிர்வாகி ஆனந்த் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.இறுதியாக முன்னால் பிரதேச செயலாளர் த.தமிழ்ச்செல்வன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள் பங்கேற்றனர்.

Saturday, February 14, 2015

காதலர் தினத்தில் காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி

காதலை வலியுறுத்தியும், காதலர் தினத்தில் காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்ககோரி புதுச்சேரி பாரதிபூங்காவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பாஸ்கர்,நாகமுத்து,ஜீவாரஞ்சித் உள்ளிட்ட வாலிபர்களும்,தந்தைபெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும் காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் காவல்துறையிடனரிடம் காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Friday, January 30, 2015

மதவெறி சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உறுதிமொழி

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான வெள்ளிக்கிழமை ஜன.30ல் புதுச்சேரியில் கடற்கரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கத்தினர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ள இந்தியாவை மதவெறி சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர்.



Thursday, January 29, 2015

பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி,ஜன.27-

பெங்கல் மற்றும் குடியரசு தினவிளையாட்டு போட்டி பரிசலிப்பு விழா அசோக்நகரில் நடைபெற்றது.

இலாஸ்பேட் அசோக்நகரில் நான்காம் ஆண்டு நடைபெற்ற இவ்விழாவிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார்.குழந்தைகள் நலபாதுகாப்புகுழு தலைவர் டாக்டர் வித்யாராம்குமார்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன், முன்னால் செயலாளர் லெனின்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.இவ்விழாவில் இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து , கிளை நிர்வாகிகள் வெங்கடேஷ்,  விக்னேஷ், நிர்மல், நிஷாந்த் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

முன்னதாக திண்டுக்கல் ஜீவா கலைக்குழுவின் தேவர் நடன கிராமிய நிகழ்ச்சியும் ,சிறுவர் சிறுமியர்கள் நடனநிகழ்ச்சியும் நடைபெற்றது.

சாமிப்பிள்ளைத்தோட்டம்

சாமிப்பிள்ளைத்தோட்டத்தில் நடைபெற்ற குடியரசுதின விளையாட்டு பரிசலிப்பு நிகழ்ச்சிக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உழவர்கரை நகர தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சரவணன், முன்னால் செயலாளர் லெனின்துரை, சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் நடராஜன், மாதர் சங்க செயலாளர் சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள்.

Thursday, January 22, 2015

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி,ஜன.22-
வாலிபர் சங்கத்தின் சார்பில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பாகூரில் நடைபெற்றது.

 
பாகூர் குருவிநத்தத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குருவிநத்தம் கிளை தலைவர் செப்பரிதி தலைமை தாங்கினார்.முன்னதாக நடத்தப்பட்ட 28வகையான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,முன்னாள் பிரதேச செயலாளர் த.தமிழ்ச்செல்வன்,கொம்யூன் தலைவர் அரிதாஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினார்கள்.இவ்விழாவில் வேர்களுக்கு விழுதுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. வாலிபர் சங்க நிர்வாகிகள் நெல்சன், சுகதேவ், சுந்தரய்யா,அருள்ஜோதி,செல்வா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

கரையாம்பத்துர்
கரையாம்பத்துரில் நடைப்பெற்ற பரிசளிப்புவிழாவிற்கு கிளைத்தலைவர் உத்தரவேலு தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக டிஒய்எப்ஜ பிரதேச தலைவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்கள்.

Thursday, January 1, 2015

புத்தாண்டு தினத்தில் போதைக்கு எதிராக புதுச்சேரியில் வாலிபர்கள் உறுதியேற்றனர்.


புத்தாண்டு தினத்தில் போதைக்கு எதிராக புதுச்சேரியில் வாலிபர்கள் உறுதியேற்றனர்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி முத்தியாள்பேட்டை விஓசி நகர் கிளைசார்பில் புத்தாண்டு தினத்தில் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.இந்நிகச்சிக்கு வாலிபர் சங்க கிளை செயலாளர் நவீன் தலைமை தாங்கினார்.பிரதேச தலைவர் ஆர்.சரவணன் வாழ்த்தி பேசினார்.நிர்வாகிகள் நாகமுத்து,அருண்,பிரபாகரன்,சந்துரு, மணிகண்டன், ஆனந்து, சூர்யா, தினேஷ், அரிஸ், பிரேம், அணில், ஜனா,ராகவன், அருண், சரன், சந்தோஷ், வினோத், குரு, ராகுல், கணேசன், யஷ்வந்த்,சுதன் உள்பட திரளான வாலிபர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.பின்பு புத்தாண்டை வரவேற்று கேக் வெட்டி கொண்டாடினார்கள்.