புதுச்சேரி,செப்-4
கூடுதல் பேருந்துகளை இயக்ககோரி புதுச்சேரியில் பள்ளிமாணவர்களின்  மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் கல்வித்துறையால் தினந்தோறும் 40க்கும் மேற்பட்ட வழிதடங்களில் பள்ளி மாணவர்களுக்கு காலையும் மாலையும் இலவச பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.ஒப்பந்த முறையில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேரூந்துகள்  தரமாணவையாக இல்லாததல் தினந்தோறும் ஏதாவது ஒரு பேரூந்து பழுதாகி ஆங்காங்கே நின்று விடுகிறது.இதனால் கிராமப்புர மாணவர்கள் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள்.மேலும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கபடுவதால் ஒவ்வொரு பேரூந்துகளிலும் 100முதல் 200 மாணவர்கள் பயணம் செய்யும் அவள நிலையும் உள்ளது.இதனால் மாணவர்கள் பேரூந்தின் படிகெட்டிலும்,பின்பக்க உள்ள ஏனியிலும் பயணம் செய்வதால் விபத்து நடக்கும் அபாயமும் உள்ளது.எனவே புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் பேரூந்துகளை கொண்டு கூடுதலாக கிராமப்புர மாணவர்களுக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தி இம் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி
புதுச்சேரி இந்திராகாந்தி சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் ஆனந்து,துணைத்தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.பேரூந்துகளை சிறைபிடித்த மாணவர்களிடம் காவல்துறை அதிகாரிளின் முயற்சியால் கல்வித்துறை துணை இயக்குநர் ரகுபாலன் மாணவர் சங்க தலைவர்களிடம் தொலைப்பேசியில் பேசுகையில் தற்போது கிராமப்புரங்களில் இயக்கப்படும் பேரூந்துகள் கன்கானிக்கப்பட்டு வருகிறது.தனியாருக்கு விடப்பட்ட ஒப்பந்த முறையை மாற்றுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது எனவே போராட்டத்தை கைவிடும் படி கேட்டு கொண்டார்.அதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பாகூர்
இதேப்போல் பாகூரில் நடைபெற்ற மாணவர்கள் மறியல் போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் பிரவீன்,செயலாளர் ஜெயராஜ்,டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் சரவணன் உள்ளிட்ட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களின் மறியல் போராட்டத்தால் புதுச்சேரில் பரப்பரப்பு ஏற்பட்டது.
படம் உள்ளது.