Thursday, November 13, 2014

மாணவ,மாணவிகள் மீது தடியடியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ. 12

புதுச்சேரி மதகடிப்பட்டில்தனியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரி புதுச்சேரி பல்கலைக் கழகத்தில்அங்கீகாரம் பெற்று இயங்கிவருகின்றது. இங்கு கடந்த 2013-14ம் ஆண்டு சேர்ந்த 82 மாணவ, மாணவிகள் கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதினர். அதே கால கட்டத்தில் தேர்வு எழுதிய பிற கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுமுடிவுகள் வெளியிட்டுள்ள நிலையில், இக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.இது தொடர்பாகமாணவர்கள் பல்கலைக்கழகம்சென்று கேட்டபோது, பல்கலைக்கழகம் நெட் (தேசியதிறனறித்தேர்வு) முடித்த 7ஆசிரியர்கள் இருக்கவேண்டிய கல்லூரியில் 4 பேர்மட்டுமே உள்ளனர். இதனால் அக்கல்லூரிக்கு தேர்வு முடிவுகள் வெளியிட முடியாதுஎன்று தெரிவித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்டமாணவர்கள் கடந்த 10தினங்களாக திருபுவனைகாவல் நிலையத்தில் புகார்அளிக்க சென்றனர். ஆனால்புகார் ஏற்கப்படவில்லை.புகார் ஏற்கப்படாததை கண்டித்தும், உடனடியாக தேர்வுமுடிவுகளை வெளியிடக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் நேற்றுமுன்தினம்சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது போலீசார் மாணவ,மாணவிகள் மீது தடியடி நடத்தினர். இதனை கண்டித்து இந்தியஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் நேற்று தலைமை தபால் நிலையம் எதிரில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன்தலைமை தாங்கினார். இதில்துணை தலைவர் தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.இதில் சங்க நிர்வாகிகள்மற்றும் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.