Thursday, May 29, 2014

கட்டாய கல்விஉரிமை சட்டத்தை அமல்படுத்தகோரி கல்வித்துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டம்.

புதுச்சேரி,மே.29-
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தகோரி  கல்வித்துறை இயக்குனரை முற்றுகையிட்டு போராட்டம்.




தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2010  கீழ் ஏழைஎளிய மாணவர்களுக்கு 25விழுக்காடு அரசு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடையை தடுத்து நிறுத்தி,கட்டணங்களை முறைபடுத்த உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் நடப்பாண்டே கட்டண நிர்ணய குழுவை அமைத்திட வேண்டும்.புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அமைத்திட வேண்டும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் எதிரில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித்,வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் பி.சரவணன் மற்றும் நிர்வாகிகள் பா°கர்,ஜெயராஜ்,சத்தியா,ஜெயலட்சுமி உள்ளிட்ட திரளான மாணவர்கள் வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

இயக்குனர் உறுதி


கல்விதுறை இயக்குனர் வல்லவனை முற்றுகையிட்ட மாணவர்களிடம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25விழுக்காடு இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் முற்றுகை போராட்டம் கைவிட்டனர்.மாணவர்கள்,வாலிபர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Wednesday, May 21, 2014

நரிக்குறவர்களின் வியாபார பொருட்களை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரி ஐஜி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நரிக்குறவர்களின் வியாபார பொருட்களை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை  கோரி ஐஜி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.


புதுச்சேரி கடற்கரை சாலையில் நரிக்குறவர்கள் கூட்டம், கூட்டமாக தங்கி பலூன்,  காற்றடித்த பொம்மைகள் போன்றவற்றை விற்று வருகின்றனர். இந்நிலையில் இரவு  கடற்கரை சாலையில் ரோந்து வந்த போலீசார் நரிக்குறவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு  இடையூறாக உள்ளதாக வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அவர்கள்  வைத்திருந்த  
பலூன், பிளாஸ்டிக் பொம்மைகளில் ஊசி மூலம் குத்தி ஓட்டையாக்கி வீணாக்கினர்.  

கடற்கரை சாலையில் இருந்துகிளம்பிச்செல்லாவிட்டால் நாள்தோறும் இந்த  நடவடிக்கை தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு செய்த போலீசார்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க   வேண்டும் எனக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  பிரதேசதலைவர்  சரவணன், நரிக்குறவர் நலவாழ்வு சங்க தலைவர் சாரங்கபாணி, நிர்வாகிகள் சங்கர்,  முரளி, சக்கரபாணி, வள்ளி, கார்த்திகா ஆகியோர் ஐஜி அலுவலகத்தை முற்றுகையி ட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நரிகுறவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வீணாகிய பொருட்களை  நரிக்குறவர்கள் ஐஜி அலுவலகம் முன்பு கொட்டி கோஷம் எழுப்பினர். 


இதுகுறித்து  கேள்விபட்ட  சீனியர் எஸ்பி ஓம்வீர்சிங் அங்கு வந்து  அவர்களை சமாதானப்படுத்தினார்.  அப்போது தேசியளவில் நடைபாதை வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என  சட்டம் உள்ளது. ஆனால் போலீசாரே இந்த  செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது  நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சீனியர் எஸ்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப் பீடுவழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து நரிக்குறவர்கள் அங்கிருந்து  கலைந்துசென்றனர். இதனால்  புதுச்சேரி
 
ஐஜிஅலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு

Tuesday, May 13, 2014

பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் டி.கிருத்திகா

பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அளவில் நடைபாதை வியாபாரியின் மகள் டி.கிருத்திகா 1200க்கு 1142 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றார்.

இதன் மூலம் அவர் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி டி.கிருத்திகா பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1142 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி அரசுப் பள்ளிகள் அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-185, ஆங்கிலம்-185, இயற்பியல்-194, வேதியியல்-193, கணிதம்-196, உயிரியல்-189.

இதுகுறித்து கிருத்திகா கூறியது:

எங்கள் பள்ளி ஆசிரியர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். எனக்கு மருத்துவராக ஆசை. எனவே, எங்களைப் போல ஏழை மாணவர்கள் அதிக பணம் கொடுத்து தனியார் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல முடியாது. எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் எனது ஆசை நிறைவேறும் என்றார். இம் மாணவியின் தந்தை தங்கவேல் பெரிய மார்க்கெட்டில் நடைபாதை வியாபாரம் செய்து வருகிறார்.

தனது மகளின் மேல்படிப்பு குறித்து இவர் கூறுகையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் நான் சேர்த்து படிக்கத் தயாராக உள்ளேன். முதல்வரும், மாநில அரசும் எனக்கு தேவையான நிதியுதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.

வாலிபர் சங்கம் பாராட்டு

மாணவி டி.கிருத்திகாவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேசத் தலைவர் ஆர்.சரவணன், நிர்வாகிகள் பாஸ்கர், விஜய், அழகப்பன், நாகமுத்து, மாதர் சங்க நிர்வாகி சத்யா ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்