Wednesday, February 13, 2013

நரிகுறவர் பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி


புதுச்சேரி,பிப்-12
இலாஸ்பேட்டை நரிகுறவர் பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி இலாஸ்பேட்டை விமான நிலையம் பின்பு உள்ள நரிகுறவர் பேட்டையில் வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும்.தெரு விலக்குகளை சீரமைத்திட வேண்டும்.சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்.மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.கடற்கரை சாலையில் புதிதாக அமைத்துள்ள அங்காடியில் பாசிமணி,ஊசிமணி விற்க இடம் அமைத்து கொடுக்க வேண்டும்.மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள நரிகுறவர் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கேரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு டிஒப்எப்ஐ பிரதேச பொருளாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,பிரபுராஜ்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுவை தலைவர் தலித்சுப்பையா,டிஒய்எப்ஐ மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ,பிரதேச செயலாளர் சரவணன்,மாதர் சங்க துணை தலைவர் சுமதி,எல்ஐசி முகவர் சங்க தலைவர் ராம்ஜி எஸ்எப்ஐ செயலளார் ஆனந்து உள்ளிட்ட திரளான வாலிபர் சங்க நிர்வாகிகளும்,குறவர் இணமக்கள் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment