Saturday, December 7, 2013

போதை-பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இளைஞர் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி,டிச.1-
போதை-பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர் இளைஞர் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரியில் நடைபெற்றது.

போதை-வன்முறை,பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடு




மை ஆகியவைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து அறுவடை- 2013 என்ற தலைப்பில் மக்கள் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் நடைபெற்றது.

       இவ்விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் வில்லியனூர் நெட்டப்பாக்கம் கொம்யூன் குழு தலைவர் சண்முகம்,எஸ்எப்ஐ கொம்யூன்குழு செயலாளர்  திவானந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். டிஒய்எப்ஐ கொம்யூன் செயலாளர் செல்வராசு வரவேற்புரையாற்றினார். புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் பி.ராஜவேலு,டிஒய்எப்ஐ தமிழ்மாநில தலைவர் செ.முத்துகண்ணன், எஸ்எப்ஐ தமிழ்மாநில துணைத்தலைவர் ரெ.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள்.

    இவ்விழாவில் வாலிபர் சங்க பிரதேச தலைவர் இரா.சரவணன்,செயலாளர் ப.சரவணன்,பொருளாளர் கதிரவன்,நிர்வாகிகள் மோகன், அரிதாஸ், மாணிக்கம், பத்மநாபன், அருள்குமரன்,எஸ்எப்ஐ பிரதேச தலைவர் அருண்,துணைத்தலைவர் ரஞ்சித்,செயலாளர் ஆனந்த் உளிட்ட திரளான வாலிபர்கள் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். முன்னதாக புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவினரின் கிராமிய பாடல்கள் மற்றும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments:

Post a Comment