Friday, August 20, 2010

போபால் நிதியா ? ஜீன் 10 - 2010


புதுச்சேரி ஜீன் 10
போபால் நிதிமன்றம் வழங்கிய திர்ப்பபை மேல்முறையிடு செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து கண்ணில் கருப்பு துணிக்கட்டி கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போபால் விஷவாய்வால்; பாதிக்கப்பட்டவரகளுக்கு 26 ஆண்டு காலம் பிறகு புதைக்கப்பட்ட நிதியை வழங்கியதை மேல் முறையீடு செய்யவேண்டும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆன்டர்சன்னை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும். விஷவாய்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்;டம் நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டதிர்க்கு வாலிபர் சங்க தலைவர் சந்துரு மாணவர் சங்க தலைவர் அரிகரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய மாணவர் சங்க தமிழ் மாநில தலைவர் ரெஜீஷ் குமார் வாலிபர் சங்க தமிழ் மாநில தலைவர் ரமேஷ்பாபு, வாலிபர் சங்க முன்னால் செயளாலர் லெனின் துரை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் வாலிபர் மாணவர் சங்க நிர்வாகிகள் மணிபாலன், சரவணன், ஆனந்து, ரஞ்சித் உள்ளிட்ட திரலானோர் கண்ணில் கருப்பு துணிகட்டிக் கொண்டு முழக்கம் மிட்டனர்.

No comments:

Post a Comment