Monday, August 16, 2010

புதுவை நேற்றும் இன்றும்


புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம். இது பிரஞ்சு காலணியாக இருந்து வந்த பகுதி. புதுச்சேரியில் நான்கு பகுதிகள் உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், யானம், மாஹே புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாடும் உள்ளது. மாஹே கேரளாவிலும் மற்றும் யானம் ஆந்திராவில் அமைந்துள்ளது.
புதுச்சேரியின் மொத்த பரப்பளவு 492 km2(190 sq.m).
புதுச்சேரி - 293 Km2 (1133 sq.m)
காரைக்கால் - 160 Km2 (62 sq.m)
மாஹே - 9 Km2 (3.5 sq.m)
யானம் - 30 Km2 (12 sq.m)
புதுச்சேரியின் வரலாறு
புதுச்சேரி முதல் நூற்றாண்டில் புதுகி என்ற பெயரை பெற்றது. இது இத்தாலிய ரோம் வணிகம் செய்த இடமாக கருதப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடல்மட்டத்தில் இருந்து பார்வை சுலபமாக இருப்பதால் கப்பல் மூலம் வணிக செய்ய பண்டை காலத்தில் இது ஒரு வணிக தலமாக இருந்தது.
இங்கு வேத பாட சாலைகள் அதிகம் இருந்தால் இதை “வேதபுரி” என்றும் அழைத்தனர். 11ம் மற்றும் 12ம் நூற்றாண்டில் புதுச்சேரி “புதுவை” என்றும் அழைக்கப்பட்டது.
புதுச்சேரி நான்காம் நூற்றாண்டில் பல்லவ ராஜ்ஜியத்தில் இருந்து வந்தது. இது பத்தாம் நூற்றாண்டு தஞ்சையை ஆண்ட சோழ ராஜ்ஜியத்தில் 300 ஆண்டுகள் இருந்தது. பிறகு பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. 1638-ஆம் ஆண்டு இஸ்லாமிய மன்னர் பிஜாபூர் சுல்தானால் செஞ்சி வரை ஆட்சி செய்யப்பட்டது. பிரெஞ்சு East India company 1673 ஆம் ஆண்டு புதுவையை தலைநகரமாக கொண்டு தொழில் தொடங்க ஆரம்பித்தனர். British மற்றும் Dutch வியாபார கம்பெனிகள் இந்தியாவில் தொழில் செய்ய போட்டியிட்டனர். இது ஐரோப்பிய நாடுக்குலோ இந்தியாவிலோ வணிகம் செய்ய சில போர்கள் ஏற்ப்பட்டது. இதன் தொடர்ச்சியாக Dutch 1693-ல் புதுச்சேரியை கைப்பற்றியது. பிறகு பிரெஞ்சுக்கும் டட்சிக்கும் ஏற்பட்ட சுலளறiஉம ஒப்பந்தத்தில் அடிப்படையில் 1699ஆம் ஆண்டு பிரெஞ்சு ஒப்படைக்கப்பட்டது.
1720 ஆம் ஆண்டு பிரெஞ்சு மாஹேவை கைப்பற்றியது. 1731-ல் யானத்தை கைப்பற்றியது. 1738-ல் காரைக்காலை கைப்பற்றியது.
1742 ஆம் ஆண்டு பிரெஞ்சு காலணியாக புதுச்சேரி, மாஹே, காரைக்கால், சந்திர நாகூர், யானம் இருந்தது.
15 ஜனவரி 1742-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள பிரெஞ்சு காலணிகளில் முதல் கவர்னராக ஜோசப் பிரான்சிஸ் டியூபிளக்ஸ் பதவியேற்றார். பிறகு அவர் மெட்ரால் பட்டனத்தை கைப்பற்றினார். 1748-ல் மெட்ராஸ் பிரெஞ்சு அட்சி இருந்தது. 30 ஆண்டு காலம் பிரென்சு கையில் இருந்தது மெட்ராஸ்.
1748-ல் பிரிட்டிஷ் புதுச்சேரியை தாக்கியபோது பிரிட்டிஷ் அரசாங்கம் தோற்றது. இதை தொடர்ந்து 1750-ஆம் ஆண்டு வில்லியனூர் மற்றும் பாகூhர் பகுதியில் 36 கிராமங்களை பிரெஞ்சு அரசு கைப்பற்றியது. இது பிரெஞ்சு ரெஜிமின் உயரிய காலமாக கருதப்பட்டது. 1793யில் புதுச்சேரியில் ஏற்ப்பட்ட ஒரு சில உள்ளுர் பிரச்சனை காரணத்தினால் பிரிட்டிஷ் அரசாங்கம் புதுச்சேரியை கைப்பற்றியது. புதுச்சேரி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மெட்ராஸ் பட்டனத்தில் ஒரு பகுதியாக கருதப்பட்டது. பிறகு 1814ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஏற்ப்பட்ட பிரிட்டிஷ் பிரெஞ்சு ஒப்பந்தத்தில் அடிப்படையில் மீண்டும் புதுச்சேரி பிரெஞ்சு கட்டுபாட்டில் 1816 ஆம் ஆண்டு வந்தது. அதற்கு பிறகு பிரெஞ்சு ஆதிக்கம் 31 அக்டேபர் 1954 வரை தொடர்ந்தது.
புதுச்சேரியை பெருத்தவரை பல ஆங்கில எதிர்ப்பு மற்றும் இந்திய விடுதலை போராட்டத்திற்கு உதவிகரமாக இருந்தது. முதலில் ஸ்ரீ அரவிந்தோ 1910-ஆம் ஆண்டு வங்கத்தில் இருந்து தப்பி இங்கு தலைமறைவாக இருந்தார். இவரை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த சுப்பரமணிய பாரதி, வாஞ்சிநாதன், ஏ.ஊ.ஊ. ஐயர் மற்றும் பலர் இங்கு தலைமறைவாக இருந்தனர்.
1936-ம் ஆண்டு 8.00 மணிநேரம் வேலை கேட்டு பிரெஞ்சு அரசாங்கத்தை எதிர்த்து ஜூலை 30 போராட்டம் உலக தொழிலாளர் வரலாற்றில் ஒரு மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இதை தொடர்ந்து இந்தியாவில் 8.00 மணிநேர வேலை, 8.00 மணிநேர ஓய்வு, 8.00 உறக்கம் என்ற தொழிலாளர் உரிமைச்சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்கு பிறகு ஏழு ஆண்டு காலம் கழிந்து 1954 அக்டோபர் 18-ஆம் தேதி இந்திய அரசுடன் பிரெஞ்சு காலணியை சேர்க்க ரகசிய தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 178 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 170 வாக்குகள் பிரெஞ்சு இந்திய ஒப்பந்ததிற்கு ஆதரவாக இருந்தது. நவம்பர் 1 1954ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் கையில் புதுச்சேரி மாற்றப்பட்டது. பிறகு 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முழுமையாக சுதந்திர இந்தியா அரசுடன் சட்டப+ர்வமாக இணைக்கப்பட்டது.
புதுச்சேரியின் ஆட்சி மொழியாக பிரெஞ்சு, தமிழ், தெலுக்கு, மலையாளம் பின்பற்றி வருகிறது. ஆங்கிலத்தை அரசாங்கம் பயன்படுத்துகின்றனர். தமிழை பேசுபவர்களின் எண்ணிக்கை 89.18 சதவீதம் மற்றும் பிறமொழி பேசுபவர்களின் 10.82 சதவீதம் உள்ளது.
புதுச்சேரியில் 6 தாலுக்காவும் 2 துணை தாலுக்காவும் உள்ளது.
புதுச்சேரியில் 8 மருத்துவ கல்லூரிகள், 10 பொறியில் கல்லூரிகள் 3 பல்மருத்துவ கல்லூரிகள், 2 சட்ட கல்லூரிகள், 1 கால்நடை மருத்துவ கல்லூரி, 1 வேளாண்மை கல்லூரி, 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகள் இங்கு உள்ளது. இதில் 90 சதவீதம் தனியார் வியாபார கல்லூரிகளே!
புதுச்சேரியின் பொருளாதாரம்
புதுச்சேரியின் உள்நாட்டு உற்பத்தி 2008-ஆம் ஆண்டு கணக்குப்படி 6457 கோடி அதில் தனிநபர் வருமானம் மாததிற்கு 5540 ரூபாய் என்று கூறப்படுகிறது. இது தேசிய அளவில் அதிக பட்சமான வருவாய் என்ற கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனங்களில் ரூபாய் 2500 முதல் 3000 வரை சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. இதை அனைவரும் அறிவர்.
புதுச்சேரியில் பன்னாட்டு நிறுவனமான WIPRO, ஹ்ச்ல், IBM, Hindustan Unilever Lmt., Suzlon போன்ற நிறுவனங்கள் இங்கே உள்ளது. அதனால் இவர்களின் 75மூ சதவீதம் தொழிலாளிகளை ஒப்பந்த (Contract) முறையில் பணிக்கு அமர்த்தி உள்ளனர். இது பாதுகாப்பு அற்ற ஒரு வேலையாக உள்ளது. மேட்டுப்பாளையம் சேதராப்பட்டு, கிருமாம்பாக்கம், தட்டாஞ்சாவடி வில்லியனூர் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் இன்று அதிகபட்சம் ஒப்பந்தம் (Labour Development) மூலமாக தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றனர். இதில் வெளி மற்றும் வடமாநிலங்களில் இருந்து பல தொழிலாளர்களை எடுத்து அடிமையாக நடத்துகின்றனர். இதை பற்றி எல்லாம் மாநில அரசு தொழிலாளர் நலத்துறை (டுயடிழரச னுநஎநடழிஅநவெ) கண்காணிப்பது இல்லை. ஆனால் வேலை வாய்ப்புளை உருவாக்கிறோம் என்று கூறி தனியார் (டீPழு) மற்றம் ஊயடட ஊநவெநச வைத்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தி அரசு பணத்தை செலவு செய்வதற்கும் மட்டுமே தொழில் துறை இயங்கி வருகிறது.
புதுச்சேரியில் Integra Software, SPI Technologies, Emphasis> Sparsh போன்ற நிறுவனங்கள் Outsourcing வியாபாரம் மூலமாக செழித்து வருகின்றனர். ஆனால் வேலை பார்க்கும் நபர்களுக்கு ரூபாய்.3000 சம்பளமாக வழங்கப்படுகிறது. உழைப்பு சுரண்டப்படுகிறது. இதை பற்றி எல்லாம் புதுச்சேரி அரசு கவலைப்படுவதே இல்லை. தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் தினகூலி ரூபாய்.40 முதல் ரூபாய்.60 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இன்றைய விலைவாசி அதிகமாக உள்ளதால் குடும்பம் நடத்துவது மிக கடுமையான விஷயமாக உள்ளது.
புதுச்சேரியில் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது என்று கூறிகின்ற மத்திய, மாநில அரசாங்கம் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார் என்றால் இன்று பல நிறுவனங்கள் புதுச்சேரியில் தொழில் செய்வதாக பதிவுசெய்து வியாபார வரி மட்டுமே புதுச்சேரியில் செலுத்துகிறார்கள்.ஆனால் அவர்களின் உண்மையான தொழிற்சாலை வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டு இங்கு வெறும் டிடைடiபெ மட்டுமே நடத்தப்படுகிறது.
புதுச்சேரியிடைய கடலோர நிலம் 45 மஅ. இதில் 65000 மீனவ குடும்பங்கள் உள்ளது. இதில் 13000 மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளன. சமீபத்தில் மத்திய அரசாங்கத்தால் பிறபிக்கபட்டு பின்பு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்ட மீன்பிடி தடை சட்டம் எதிர்வரும் காலத்தில் இவர்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை போல் சோமாலிய நாட்டில் மீன்பிடி தடை சட்டத்தால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் கடல் கொள்ளையர்களாக மாறி சமீபத்தில் இந்திய கப்பல்களை கைப்பற்றியதை நாம் அறிவோம். பிறகு அவர்கள் ரானுவத்தால் கடல் கொள்ளப்பட்ட இளைஞர்களை நாம் அறிவோம்.
புதுச்சேரியில் சமீப காலமாக 3 நட்சத்திரம் ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகிறது. இவைகள் பல அரசின் மானியத்துடன் கட்டப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் அரசாங்கம் இவர்களுக்கு மானியம் அளித்து உள்ளது. காரணம் சுற்றலாத்தளம் வளர்க்க என்று அரசாங்கம் கூறி வருகிறது. ஹோட்டல் மற்றும் லார்ட்ஜ் ஒரு முக்கிய தொழிலாக அரசாங்கம் கருதுகிறது. ஆனால் இதற்கு பின்ப்புறம் புதுச்சேரியில் விபச்சாரம் மிக வேமான தொழிலாக வளர்ந்து வருகிறது. 2007-ம் அண்டு கணக்கப்படி புதுச்சேரியின் 9200 நபர்களுக்கு AIDS நோய் இருப்பதாக புதுவை அரசாங்கம் அறிவித்துள்ளது. காரணம் பெருகிவரும் ஹோட்டல் மற்றும் லார்ட்ஜ் கலாச்சாரமே.
சமூக குற்றவும் புதுச்சேரியும்
புதுச்சேரியில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை 2,10,000 இளைஞர்கள் பதிவு செய்து உள்ளனர். ஆனால் இந்த இளைஞர்களுக்கு அரசு அந்த புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. இளைஞர்களை தவறான ஒரு வழியில் தான் ஆட்சியளார்கள் திசை மாற்றி வருகிறனர். அடியாட்களையும், கட்டபஞ்சாயத்து செய்யும் ரவுடிகளாகவும் வளர்த்து வருகிறனர். புதுச்சேரி பிரதேசத்தில் 2010ஆம் ஆண்டு மற்றும் 38 கொலைகள், 25 கொலை முயற்சி என ஒட்டு மொத்தமாக புதுச்சேரியில் மட்டும் சமூககுற்றங்கள் கடந்த 8 மாதத்தில் 4591 புதிதாக புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரம் மிக வேகமாக பரவி வருகிறது. இது புதுச்சேரியில் சட்டஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
பஞ்சாலையும் புதுச்சேரியும்
புதுச்சேரியில் அரசாங்கம் கணக்குபடி 11 பஞ்சாலை இருப்பதாக கூறப்படுகிறது. அதில் அரசுக்கு சொந்தமனா AFTமில்இ பாரதி மில், சுதேசி மில், இன்று மூடக்கூடிய அபாயகரமான நிலை உள்ளதாக புதுச்சேரி அரசாங்கம் கூறி வருகிறது. இவை அனைத்தும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறது. ஆனால் இந்தியாவை பெருத்தவரை பஞ்சாலை தொழில் லாபகரமான தொழிலாக நடந்து வருகிறது. இந்தியா 25 சதவீதமான பஞ்சியை (Raw material) வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் ஜவுளி பூங்கா ஆயிரக்கணக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. காரணம் பஞ்சாலை ஒரு லாபகரமான தொழில் தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக நூறு பஞ்சாலை துவங்கப்பட்டு லாபகரமான தொழிலாக நடந்து வருகிறது. இப்படி இருக்க புதுச்சேரி அரசு மற்றும் பஞ்சாலை நஷ்டம் என்று கூறி முடநினைப்பது ஒரு தவறான கொள்ளையாகும். யுகுவு மில்லை வெறும் 13 கோடியில் நவீனபடுத்தினால் ஆயிரம் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற மத்திய அரசு குழு கூறியதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இளைஞர்கள்
“இளைஞர்கள்” எனில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் அதாவது, மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய தரவர்க்கம் ஆகியவற்றை சேர்ந்த 15- 40 வயதுக்குட்பட்ட அனைவருமாவர். இந்த நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் பெரும்பகுதி ஆவார்கள்.
இளைஞர்கள் இச்சமூகத்தின் வேகமும், உற்சாகமும் கொண்ட ஆற்றல் மிகுந்த பிரிவினர் ஆவார்கள். ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது சமூகத்தின் இந்தப் பிரிவினரின் மேம்பாட்டைப் பொருத்து அமையும். ஆனால் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தி இச்சமூகத்தினை முன்னேற்றிச் செய்வதற்கான உரிமையும், வாய்ப்பும் இப்பிரிவினருக்கு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது.

1 comment: