Saturday, January 12, 2013

பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை இயக்க கோரி

புதுச்சேரி,ஜன-12

பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை இயக்க கோரி மாணவர்கள் வாலிபர்கள் சார்பில் நுhதன போராட்டம் நடைபெற்றது.



புதுச்சேரி பாகூர் கொம்யூனில் உள்ள ஆரம்ப சுகாதாரா நிலையத்தில்  கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும்.ஆம்பலன்ஸ் ஓட்டுநர்,கடைநிலை ஊழியர்களை நியமிக்க வேண்டும்.உயிர்காக்கும் மருந்துகள்,பாம்புகடி,நாய்கடி மருந்துகளை இருப்பு வைத்து,24 மணிநேரமும் செயல்படக்கூடிய சமூதாய நலவழிமையமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி இப்போராட்டம் நடைபோராட்டம்.
பாகூர் ஆரம்ப சுகாதராநிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொம்யூன் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.இந்திய மாணவர் சங்க கொம்யூன் தலைவர் பிரவீன் முன்னிலை வகித்தார்.டிஒய்எப்ஐ தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,பிரதேச செயலாளர் ப.சரவணன்,கொம்யூன் பொருளாளர் தனிகா,மாணவர் சங்க கொம்யூன் செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நிர்வாகிகள் வீரப்பன்,செம்பரிதி,வீரமணி,இந்து,சந்திரசேகர்,அன்புநிருபன் உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்களை சேர்ந்த திரளானோர இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக வாலிபர்கள்,மாணவர்கள் தங்களது  உடல்களில் கட்டு கட்டும் துணியை   கட்டி கொண்டு இந்த நுhதன போராட்டத்தில் பங்கேற்றது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.

No comments:

Post a Comment