Thursday, November 13, 2014

மாணவ,மாணவிகள் மீது தடியடியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ. 12

புதுச்சேரி மதகடிப்பட்டில்தனியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரி புதுச்சேரி பல்கலைக் கழகத்தில்அங்கீகாரம் பெற்று இயங்கிவருகின்றது. இங்கு கடந்த 2013-14ம் ஆண்டு சேர்ந்த 82 மாணவ, மாணவிகள் கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதினர். அதே கால கட்டத்தில் தேர்வு எழுதிய பிற கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுமுடிவுகள் வெளியிட்டுள்ள நிலையில், இக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.இது தொடர்பாகமாணவர்கள் பல்கலைக்கழகம்சென்று கேட்டபோது, பல்கலைக்கழகம் நெட் (தேசியதிறனறித்தேர்வு) முடித்த 7ஆசிரியர்கள் இருக்கவேண்டிய கல்லூரியில் 4 பேர்மட்டுமே உள்ளனர். இதனால் அக்கல்லூரிக்கு தேர்வு முடிவுகள் வெளியிட முடியாதுஎன்று தெரிவித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்டமாணவர்கள் கடந்த 10தினங்களாக திருபுவனைகாவல் நிலையத்தில் புகார்அளிக்க சென்றனர். ஆனால்புகார் ஏற்கப்படவில்லை.புகார் ஏற்கப்படாததை கண்டித்தும், உடனடியாக தேர்வுமுடிவுகளை வெளியிடக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் நேற்றுமுன்தினம்சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது போலீசார் மாணவ,மாணவிகள் மீது தடியடி நடத்தினர். இதனை கண்டித்து இந்தியஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் நேற்று தலைமை தபால் நிலையம் எதிரில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன்தலைமை தாங்கினார். இதில்துணை தலைவர் தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.இதில் சங்க நிர்வாகிகள்மற்றும் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

Sunday, August 3, 2014

ரெயில் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 150 பேர் கைது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ரெயில் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் ரெயில் மறியல் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்காக இன்று அவர்கள் தூய இருதய ஆண்டவர் கோவில் அருகே ஒன்று கூடினர்.

அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு வாலிபர் சங்க தலைவர் சரவணன், மாணவர் சங்க தலைவர் அருண்குமார், மாதர் சங்க தலைவி தெய்வானை ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க மாநில செயலாளர்கள் சரவணன், ஆனந்த், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் ரஞ்சித், தமிழ்செல்வன், தட்சிணாமூர்த்தி, சுமதி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊர்வலமாக வந்த அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் வந்து சென்னையிலிருந்து புதுவைக்கு வந்த ரெயிலின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி கட்சிக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதைக்கு எதிராகவும் , பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி


சென்ற 06 ஜூலை 2014 அன்று புதுச்சேரி பாகூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் குழு சார்பில் கடலூர் தியாகிகள் தோழர்கள் குமார் , ஆனந்தன் நினைவில் போதைக்கு எதிராகவும் , பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தோழர் குமாரின் தாயார் திருமதி சாவித்திரி அவர்கள் கலந்துக் கொண்டார்கள். முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Youth and College students demanding 25 p.c. quota

Several hundred students in government colleges across the city on Thursday boycotted classes and conducted a dharna in front of the Pondicherry Central University demanding the implementation of 25 per cent reservation of seats to the local students of Puducherry.

The students also urged the Union Minister for Human Resources Development to order a probe into alleged irregularities committed by the university.

On Thursday morning, gate protests were held in front of eight colleges. The student leaders of the Student Federation of India(SFI) and Democratic Youth Federation of India (DYFI) addressed the meetings.
Later, over 1,000 students took out a rally from Pondicherry Engineering College to the Pondicherry Central University administrative campus. 

The march was stopped by police posted at the entrance to the university premises. Several students tried to push forward even as police used force to keep them at bay. In the ensuing melee, some students managed to gate-crash into the premises. 

Around 20 protestors were arrested and released later in the evening. 

The students from Bharathidasan Government College for women, Tagore Arts College, Pondicherry University Community College, Motilal Nehru Government Polytechnic, Government Women’s Polytechnic College, Indira Arts and Science College, Perunthalaivar Kamarajar Arts and Science College, Rajiv Gandhi Arts College also participated. 

According to the students, when the Pondicherry Central University was established in 1985, the then authorities assured of employment opportunities to the family members of the agriculturalists who donated land for the establishment of university.

They also assured that 25 per cent reservation would be provided for students from Puducherry in all courses offered in the university.

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகை

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சட்டக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக ரூ.740 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, சட்டக் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

Friday, June 20, 2014

ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது, D Y F I தொடர் முயற்சிக்கு வெற்றி

ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது, D Y F I தொடர் முயற்சிக்கு வெற்றி

புதுச்சேரி அஜந்தா சிக்னலில் ஹைமாஸ் விளக்கு இயங்கவில்லை என்ற மனு சம்பந்தமாக இந்திய ஜனநாயக சங்க தோழர்கள் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு .கனகராஜ் அவர்களை மீண்டும் சந்தித்து பேசுகையில் இன்னும் 10 நிமிடத்தில் விளக்கு எரியும் என்று கூறினார் .ஹைமாஸ் விளக்கு மீண்டும் எரிந்தது . பிறகு அப்பகுதி மக்கள் வாலிபர் சங்க தோழர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Saturday, June 14, 2014

Democratic Youth Federation of India - Puducherry Pradesh Committee demands the state government for CBI Enquiry

Students' Federation of India and the Democratic Youth Federation of India - Puducherry Pradesh Committee demands the state government for CBI Enquiry in the case of prostitution mafia gang which was recently arrested and involving minor girl students in prostitution from a economically poor and in a weaker section.
 
பெறுநர்,                                                                                          13/06/2014.
உயர்திரு.முதலமைச்சர்.அவர்கள்,
புதுச்சேரி அரசு,
புதுச்சேரி.
பொருள்:- பள்ளி சிறுமிகள்பாலியல்தொழிலுக்கு உட்படுத்திய வழக்கை
                  சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துறைக்க கோருதல் தொடர்பாக.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்! புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் விபச்சார கும்பல் ஒன்று பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இச்செய்தி புதுச்சேரியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இச்சம்பவத்தில் பல முக்கிய புள்ளிகள், பிரமுகர்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவருகிறது. மேற்படி விபச்சார கும்பல் பெரும்பாலும் வறுமை நிலையை பயன்படுத்தியும், ஆசைகாட்டியும் மாணவிகளை இது போன்ற மிகமோசமான பாலியல் இழிதொழில் புதைகுழிக்கு பள்ளிச்சிறுமிகள் தள்ளப்படுகிறார்கள். பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக புதுச்சேரி மாறி வருவது வேதனையளிப்பதாகும். சிறுமிகள் மீதான பாலியல் வழக்கில் அதில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கற்பழிப்பு, குழந்தைகள் மீதானபாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டுகிறோம். இதில் சம்பந்தப்பட்ட கயவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறோம். 
• இவ்வழக்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற புதுச்சேரி அரசு இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம்ஒப்படைக்கவேண்டும்.
• கேரளாவில்நடைபெற்றுவரும்சிறுமி சுரியநல்லி கற்பழிப்பு வழக்கை போன்று இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படவேண்டும். 
• விசாகா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றம் 1996ல் வழங்கிய தீர்ப்பு மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ்
அனைத்து கல்விநிலையங்களிலும் பாலியல் புகார் குழுக்களை
அமைத்திட வேண்டும்.
• 2013ம் ஆண்டு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மத்திய அரசால் அமைக்கப்பட்ட வர்மா குழுவின் பரிந்துரையின் படி இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் மூலமாக நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தாமதமின்றி கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறோம். 
•குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தை முழுமையாக செயல்படுத்த கேட்டுகொள்கிறோம்.
மேலும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடைச்சட்டம், பெண்களை இழிவுபடுத்தும் தடைச்சட்டம், வரதச்சனை தடைச்சட்டம் போன்ற பெண்கள் தொடர்பான சட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டும். பெண்கள் தொடர்பான வழக்குகளை உரிய முறையில் கையாள்வதற்கு காவல் துறையினருக்கு உரிய பயிற்சி அளித்திடவும்தங்களை கேட்டுகொள்கிறோம்.
                                            நன்றி,
இவண்,
 செயலாளர்,                                                       செயலாளர்,
 அ. ஆனந்த்                                                         ப.சரவணன் 
இந்திய மாணவர்சங்கம்(SFI).     இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்(DYFI).