Thursday, January 30, 2014

சாதி மத மோதலை எதிர்த்து புதுச்சேரியில் வாலிபர்கள் மாணவர்கள் சைக்கிள் பிரச்சாரம்

புதுச்சேரி,ஜன.30-

                        சாதி மத மோதலை எதிர்த்து புதுச்சேரியில்
வாலிபர்கள் மாணவர்கள் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.

                     புதுச்சேரியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.சாதி மத மோதலை தடுத்திட வேண்டும்.போதை வன்முறை கலாச்சாராத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க வேண்டும்.பெண்கள் மீதான வன்முறையை தாக்குதலை தடுக்க போதுமான  நடவடிக்கையை  எடுக்க வேண்டும்.கல்வி வியாபாரத்தை மாநில அரசு தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இலாஸ்பேட்டை,மதடிப்பட்டு,கரையாம்பத்தூர்,கரியமாணிக்கம் ஆகிய நான்கு மையங்களில் இருந்து இப்பிரச்சாரம் துவங்கப்பட்டது.

லாஸ்பேட்டை 
                                                             இலாஸ்பேட்டை நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை எதிரே துவங்கிய இப்பிரச்சாரத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்க முன்னால் செயலாளர் லெனின்துரை சைக்கிள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.முன்னால் பொருளாளர் பிரபுராஜ் வாழ்த்தி பேசினார்.நிர்வாகிகள் பாஸ்கர்,அழகப்பன்,ஜீவாரஞ்சித் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதகடிப்பட்டு
                                      மதகடிப்பட்டில் துவங்கிய சைக்கிள் பிரச்சாரத்திற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து,வாலிபர் சங்க பிரதேச துணைத்தலைவர் தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்.  நிர்வகிகள் கார்க்கி,கவியரசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
கரையாம்பத்தூர்

                                    பாகூர் கொம்யூன் கரையாம்பத்தூரில் துவங்கிய பிரச்சாரத்திற்கு டிஒய்எப்ஜ பிரதேச செயலாளர் பி.சரவணன்,எஸ்எப்ஐ நிர்வாகி ஜெயராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.பிரச்சாரத்தை வாலிபர் சங்கத்தின் முன்னால் செயலாளர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.நிர்வாகிகள் அரிதாஸ்,பிரவீன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
                            
கரியமாணிக்கம்
                                                           கரியமாணிக்கம் நான்கு முனைச்சந்திப்பில் துவங்கிய பிரச்சாரத்திற்கு டிஒய்எப்ஐ பொருளாளர் டி.கதிரவன்,மாணவர் சங்க பிரதேச தலைவர் அருண்குமார்  ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.நிர்வாகிகள் சண்முகம்,திவானந்து உள்ளிட்ட திரளான வாலிபர்கள் மணவர்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

நான்கு முனையில் இருந்து துவங்கிய சைக்கிள் பிரச்சாரம் இறுதியாக மாலையில் ,புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே அனைவரும்  சங்கமித்தனர்.பின்னர் அங்கு சாதி மத மோதலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது.இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு சைக்கிள் பிரச்சாரத்தை முடித்து வைத்து பேசினார்.

No comments:

Post a Comment