Tuesday, December 20, 2011

பாலியல் குற்றத்திலிருந்து பெண்களை பாதுகாக்க பாலியல் துன்புறுத்தல் சட்டம் கொண்டு வருவேண்டும்


புதுச்சேரி,டிச-18
பாலியல் குற்றத்திலிருந்து பெண்களை பாதுகாக்க பாலியல் துன்புறுத்தல் சட்டம் கொண்டு வருவேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுசெயலாளர் சுதாசுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி ஜி தங்கும் விடுதியில் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் ஈடுபடுத்திய குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் சம்பந்தபட்ட விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மருத்தவ பரிசோதனைக்காக காவல்துறை கட்டுபாட்டில் இருந்த இளம்பெண் காணாமல் போனதாக காவல்துறை கூறுவதை கண்டித்து மாதர்,வாலிபர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேருவீதி காந்தி வீதி சந்திப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் பங்கேற்று பேசுகையில்,
நாடுமுழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.இதில் பெண்களுக்கெதிரான குற்றங்கங்களே அதிகமாக நடைபெறுகிறது.குறிப்பாக ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் பெண்கள் பாலியல்ரீதியான குற்றத்தில் பாதிக்கபடுகின்றனர்.ஒரு நாளைக்கு 56பெண்களும்,ஒரு மணிநேரத்திற்கு 3 பெண்கள் என பாதிக்கபடுகின்றனர்.பாதிக்கபடும் பெண்கள் மீதே சிலஅவதுhறுகளை பரப்பி குற்றத்தை நியாயப்டுத்தும் சம்பவம் ராஜாஸ்தான் மாநிலத்தில் அன்மையில் நடந்தேறியுள்ளது.எனவே தண்டனை குறைவாக இருப்பதால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே பாலியல் துண்புருத்தல் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றார்.
இப்போராட்டத்தில் மாதர் சங்க பிரதேச தலைவர் தெய்வானை,செயலாளர் சத்தியா,நிர்வாகிகள் சுமதி,இளவரசி, வாலிபர்சங்க சங்க தலைவர்கள் சந்துரு,பிரபுராஜ்,சரவணன்,பார்த்தசாரதி,பா°கர் உள்ளிட்ட திரளான வாலிபர்கள்,மாதர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment