Tuesday, September 3, 2013

தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,செப்-3
தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இயங்கிவரும் கஸ்தூரா டிசைன் சென்டரில் பணி புரிந்து வந்த பெண் தொழிலாளர் அம்பிகை யை  நிர்வாகம் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.எனவே மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்பிகாவிற்கு பணி வழங்ககோரி தொழிற்சாலை முன்பு இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.சங்கத்தின் முன்னால் நிர்வாகிகள் பிரபுராஜ்,தட்சணாமூர்த்தி,நகரகமிட்டி துணைத்தலைவர் நாகமுத்து,கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி ஜெகதீசன் உள்ளிட்ட பாதிக்கபட்ட பெண்ணின் உறவினர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.


மீண்டும் வேலை வழங்கிய நிர்வாகம்

போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் பேசிய நிர்வாகத்தின் மேலான் இயக்குநர் அனிதா கஸ்தூரா,பணி நீக்கம் செய்யப்பட்ட அம்பிகைவிற்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தது.அதனை தொடர்ந்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment