Tuesday, September 10, 2013

நரிகுறவர் மக்களை அவமதித்த புதுச்சேரி தலைமை செயலாளரை கண்டித்து முற்றுகை போராட்டம்

புதுச்சேரி,செப்-10



நரிகுறவர் மக்களை அவமதித்த புதுச்சேரி தலைமை செயலாளரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள புதுச்சேரி நரிகுறவர் வாழ் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி புதுச்சேரி தலைமை செயலாளர்,நலத்துறை செயலாளர் ஆகியோரிடம் மனு கொடுக்க உறிய அனுமதி செவ்வாய்கிழமை (செப்-10) காலை பெற்று இருந்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர்களோடு இணைந்து நரிகுறவர் வாழ்மக்கள் சங்க நிர்வாகிகள் தலைமை செயலாளரை சந்தித்து மனு கொடுக்க சென்ற போது அவர்களுக்கு அனுமதி மறுத்தோடு, ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சந்திப்பதாக தலைம செயலாளரின் உதவியாளர் கூறியுள்ளார்.

முற்றுகை போராட்டம்
காலை 10மணிமுதல் மாலை 4மணி வரை தலைமை செயலகத்தின் வெளியே    வாலிபர் சங்க பிரதேச தலைவர் சரவணன்,நிர்வாகிகள் பாஸ்கர்,யோகராஜ்,பிரதாப் மற்றும் நரிகுறவர் மக்கள் சங்க தலைவர்கள் சக்கரபாணி,சங்கர் ஆகியோர் காத்திருந்தனர்.பின்னர் தலைமை செயலாளாரின் உதவியாளர் வேறு ஒரு தேதிக்கு உங்களை சந்திப்பதாக தலைமை  செயலாளர் தெரிவித்துள்ளார் என்று சங்க நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.உடனே வாலிபர் சங்க தலைவர்கள் மற்றும் நரிகுறவர் மக்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் அரசு அதிகாரிகளை கண்டித்து தலைமை செயலகத்தின் பின்புறம் வாயிலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.
பேச்சுவார்த்தை
முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் நரிகுறவர் மக்கள் சங்க நிர்வாகிகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதோடு,செப்டம்பர் 13ல் தலைமை செயலாளரை சந்திக்க அனுமதி பெற்று தந்ததையொட்டி முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.இப்போராட்டத்தால் தலைமை செயலகம் அதனை சுற்றியுள்ள பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டது. 

No comments:

Post a Comment