Saturday, September 14, 2013

மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரிகிருஷ்ணனை தகுதி நீக்கம் செய்யக்கோரி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,செப்-12
மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரிகிருஷ்ணனை தகுதி நீக்கம் செய்யக்கோரி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியை அடுத்துள்ள பாகூர் இருளன்சந்தை அரசு ஆரம்பப்பள்ளியில் 3ஆம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் அரிகிருஷ்ணனை பணிநீக்கம் செய்து,ஆசிரியர் தகுதியை ரத்து செய்ய வேண்டும்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு தனியாக பேருந்து வசதியை அமைத்து கொடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

பாகூர் மேற்குவீதியில் நடைபெற்ற கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார்.வாலிபர் சங்க கொம்யூன் தலைவர் அரிதாஸ்,மாணவர் சங்க கொம்யூன் தலைவர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு புதுச்சேரி அமைப்பாளர் வி.சுமதி,சிபிஎம் கொம்யூன் குழு செயலாளர் தமிழ்ச்செல்வன்,விவிசாயிகள் சங்க பிரதேச தலைவர் பத்மநாபன்,டிஒய்எப்ஐ பிரதேச செயலாளர் சரவணன்,மாணவர் சங்க பிரதேச தலைவர் அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினார்க.முன்னதாக மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் திரளான பெண்கள்,மாணவர்கள்,வாலிபர்கள் கருப்பு கோடியுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment