Wednesday, April 17, 2013

அதிகாரியை தாம்பூல தட்டு வைத்து அழைக்கும் நூதன போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது



புதுச்சேரி,ஏப்-16
அதிகாரியை தாம்பூல தட்டு வைத்து அழைக்கும்  நூதன போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுக்கு உட்பட்ட பொய்யாகுளம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கழிவரை கட்டி கொடுக்க வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை அப்புரபடுத்த வேண்டும்   என்பன நீண்ட நாட்களாக உள்ள இக் கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் கரை நகராட்சி ஆணையரை தாம்பூலதட்டு வைத்து அழைக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பூமியான் பேட்டையில் உள்ள உழவர்கரை நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொய்யாகுளம் கிளை தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் இரா.சரவணன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் என்.பிரபுராஜ் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.உழவர்கரை நகர தலைவர் பி.அந்துவான்,செயலாளர் முரளி,நகரகமிட்டி செயலாளர் அழகப்பன்,துணை தலைவர் நாகமுத்து,பொய்யாகுளம் பகுதி பெண்கள்,வாலிபர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆணையர் அலுவலம் முற்றுகை
முன்னதாக தட்டாஞ்சாவடி கொக்குபார்க் அருகில் இருந்து துவங்கிய ஊர்வலம் உழவர்கரை நகராட்சி அலுவலகம் வரை தாம்பூலதட்டுடன் கோரிக்கைகளை முழங்கியவாறு வந்தனர்.பின்னர் நகராட்சி ஆணையரை சந்திக்க வெத்தலை பாக்கு,பூ,பழம் அடங்கிய  தாம்பூல தட்டுடன் சென்றனர்.நகராட்சி ஆணையர் அங்கு இல்லாததால் அங்கேயே  அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கமிட்டனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் பொய்யாகுலம் பகுதிக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினார்கள் இன்னும் ஒரு மாதத்தில் இக்கோரிக்கைகளை  நிறைவேற்றி தருவதாக வாலிபர் சங்க தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.அதிகாரிகளின் உறுதி மொழியை ஏற்று இப்போராட்டம் தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்தனர். 

No comments:

Post a Comment